பிரதோஷம் என்பது நம்முடைய கர்ம வினைகளையும், பிறவி கடனையும் நீக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை நீக்கி நன்மைகளை தரக்கூடிய நாளாகவும் பிரதோஷம் திகழ்கிறது. இந்த பிரதோஷம் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும். புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷம் என்பது பல நன்மைகளை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதோஷ நாளன்று செய்யவேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
புரட்டாசி வளர்பிறை பிரதோஷ வழிபாடு
பொதுவாகவே பிரதோஷம் என்றாலே மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த நேரம் தான் பிரதோஷ நேரம் என்று பொருள்படும். இன்றைய காலத்தில் பலரும் அலுவலக வேலையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களால் அந்த நேரத்தில் வழிபாடு செய்ய இயலாத சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் எந்த நேரத்தில் எப்படி வழிபட்டால் பிரதோஷத்திற்குரிய முழு பலனையும் பெற முடியும் என்று தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 7:45 இல் இருந்து 8 45க்குள், காலை 10:45 இல் இருந்து 11 45க்குள், மாலை 4:30ல் இருந்த 6 மணிக்குள் அல்லது 6 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம். வீட்டில் சிவபெருமானின் எந்த லிங்கம் இருந்தாலும் அந்த லிங்கத்திற்கு தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு வாசனை நிறைந்த மலர்களால் சிவலிங்கத்தை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக தேங்காய் சாதத்தை வைக்க வேண்டும்.
இப்படி நைவேத்தியம் வைத்தபிறகு சிவபெருமானின் மந்திரமாக “ஓம் சிவ சிவ சங்கரா போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் மதியம் 12:40 மணிக்கு அல்லது இரவு 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் நம்முடைய வீட்டு நிலை வாசலுக்கு மலர்களை தூவி சாம்பிராணி தூபம் மற்றும் கற்பூர ஆரத்தி காட்டி நிலை வாசலை தொட்டு வழிபாடு செய்ய வேண்டும்வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பணம் ரீதியான சிக்கல்களும் நெருக்கடிகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் அன்றைய தினத்தில் மூன்று திதிகளும் ஒரே நாளில் வருவது தான்தான். மேல் சொன்ன வழிபாட்டை செய்ய இயலாதவர்கள் அல்லது கோவிலுக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் யாரிடமாவது விபூதியை வாங்கி கொடுத்து கோவிலில் தானமாக தரச் சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டதமேற்கொண்டதற்குரிய முழுமையான பலனும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: வராத பணம் திரும்ப கிடைக்க
இந்த பிரதோஷ வழிபாட்டையும் நிலை வாசல் பூஜையையும் தவறாமல் நாளைய தினம் செய்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறுவதோடு பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.