- Advertisement -

மோசமான விதியை மாற்றும் முத்திதி சதுர்த்தி

- Advertisement -

மூத்த கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும், எந்த ஒரு வழிபாட்டை நாம் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு தான் அந்த வழிபாட்டையே செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்றும், அதேபோல் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் விநாயகப் பெருவாளை பெருமானை வழிபாடு செய்துவிட்டு அந்த செயலை தொடங்கும் போது அந்த செயலில் வெற்றிகள் உண்டாகும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். தடைகளை நீக்கக்கூடிய விநாயகருக்கு உகந்த திதியாக சதுர்த்தி திதி திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு சதுர்த்திகள் வரும். இதில் பலரும் தேய்பிறை சதுர்த்தியான சங்கடகர சதுர்த்தி அன்றுதான் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். வளர்பிறை சதுர்த்தியிலும் நாம் சிறப்பான முறையில் விநாயக பெருமானை வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் வளங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வழிபாட்டு முறையைப் பற்றிதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விதியை மாற்றும் முத்திதி சதுர்த்தி

மாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் சிறப்பு வாய்ந்த திதியாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக விநாயகர் பெருமானுக்கு உகந்த வளர்பிறை சதுர்த்தி திதி என்பது விநாயகப் பெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையோடு சேர்ந்து வருவதோடு அன்றைய தினத்தில் மூன்று திதிகளும் சேர்ந்து வருகிறது என்பதால் அன்றைய நாளில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது விநாயகப் பெருமானின் அருளால் நம்முடைய எப்பேர்பட்ட கஷ்டங்களும் மாறி நல்ல நேரம் பிறக்க ஆரம்பிக்கும். அந்த வழிபாட்டு முறையைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மார்ச் மாதம் மூன்றாம் தேதி திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 :58 வரை திருதியை திதி இருக்கிறது. அதற்கு பிறகு சதுர்த்தி திதி ஆரம்பித்து இரவு 10:36 வரை இருக்கிறது. அதற்குப் பிறகு பஞ்சமி திதி பிறக்கிறது. அன்றைய தினத்தில் மூன்று திதிகளும் சேர்ந்து வருகிறது. மேலும் இது வளர்பிறை சதுர்த்தியாகவும் திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சதுர்த்தியாகவும் திகழ்வதால் இதற்கு அதிக அளவில் சிறப்புகள் உள்ளது.

இன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான பொருளாக திகழக்கூடிய அச்சுவெல்லம் மற்றும் தேங்காயை வாங்கித் தர வேண்டும். இதிலிருந்து பிரசாதமாக சிறிதளவு மட்டும் வாங்கிக் கொள்ளலாம். முழுவதையும் திருப்பி வாங்கக்கூடாது. விநாயகப் பெருமானுக்கு இதை சமர்ப்பணம் செய்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு இரண்டு தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவரை வழிபாடு செய்து விட்டு வர நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்ட காலங்கள் அனைத்தும் நீங்கி நல்ல காலம் பிறக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

மேலும் அன்றைய தினத்தில் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நேரத்தில் அச்சுவெல்லத்தை நெய்வேத்தியமாக வைத்து “ஓம் விக்ன விநாயகா போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வதோடு விநாயகர் அகவலையும் கூறி வழிபாடு செய்ய விநாயகர் பெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்

அதீத சக்தி வாய்ந்த மூன்று திதிகள் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளை தவற விடாமல் முழுமனதோடு விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் அவர்களுடைய வாழ்க்கையில் இதுவரை அனுபவித்து வந்த அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி நல்ல நேரம் பிறக்க ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -