வாழ்க்கையில் எல்லோரும் உயர்ந்த இடத்திற்கு சென்று விட வேண்டும் என்றுதான் போராடி வாழ்க்கையை நடத்துகின்றோம். அதற்கான உழைப்பையும் தான் தினமும் முதலீடாக போடுகின்றோம். ஆனால் எல்லோருக்கும் பணம் காசு கிடைத்து விடுகிறதா? எல்லோருக்கும் மன நிம்மதி கிடைத்து விடுகிறதா? எல்லோருக்கும் வெற்றி கிடைத்து விடுகிறதா? எல்லோரும் சாதனையாளர்களாக மாறுகிறார்களா? நிச்சயம் கிடையாது.
அந்த இறைவனின் பரிபூரண அருள் யாருக்கு கிடைக்கிறதோ, யாருடைய நேரம் காலம் நன்றாக இருக்கிறதோ, யாருடைய தலை எழுத்தில் அவர்கள் வாழ்க்கையில் பெரிய செல்வந்தர்களாக உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று இருக்கிறதோ, அவர்களால் மட்டும்தான் ஜெயிக்க முடிகிறது. மற்றவர்கள் தோற்று தான் போகிறார்கள். இதை நம்மால் இல்லை என்று சொல்ல முடியுமா. நிச்சயம் முடியாது.
அப்படி என்றால் வாழ்க்கையில் இந்த உலகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சமமாக இருந்திருப்போம். ஏற்றத்தாழ்வுகள் என்ற நிலைமையை வந்திருக்காது. இந்த பிரச்சனையில் இருந்து நாம் விடுபட வேண்டும். வறுமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். ஏதேதோ கிறுக்கி வைத்திருக்கும் நம்முடைய தலையெழுத்து அழிக்கப்பட்டு, நல்லபடியாக எழுத வேண்டும் என்றால் அம்பாளை எப்படி வணங்குவது? எந்த பெயரைச் சொல்லி வணங்குவது. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
அம்பாள் வழிபாடு
தாய் பராசக்திக்கு பல ரூபம். அந்த அம்பாளுக்கு ஆயிரம் கண்கள். அம்மா தாயே என்று அழைத்து உங்களுடைய கஷ்டங்களை சொன்னால் அந்த கஷ்டத்தை தீர்ப்பதற்கு அவள் ஓடோடி விடுவாள். அந்த அம்பாளின் பல ரூபங்களில் ரேணுகாதேவி அவதாரம் நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். சில இடங்களில் இந்த ரேணுகா பரமேஸ்வரிக்கு பிரத்தியேகமாக கோவிலும் இருக்கிறது.
அந்த ரேணுகா தேவியை தினமும் நாம் மனதில் நினைத்து வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கை ஓஹோ என மாறும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த ரேணுகா தேவியை வழிபாடு செய்ய ஒரு பிரத்தியேக மந்திரமும் இருக்கிறது.
தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி குல தெய்வத்தை வழிபாடு செய்து விட்டு, உங்களுடைய கிறுக்கலான தலையெழுத்தை மாற்றி அமைக்க அம்மா தாயே என்று அம்பாளை கூப்பிடுங்கள். “ரேணுகா ஏக வீரா ஜெகன் மாதா” என்ற மந்திரத்தை சொல்லுங்கள். கணக்கு கிடையாது எத்தனை முறை வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, கொஞ்சமாக குங்குமம் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, உங்களுடைய வேலையை செய்யுங்கள்.
இவ்வளவுதான் பரிகாரம். பிறகு உங்களுடைய வேலையை நீங்கள் துவங்கலாம். விளக்கு கூட ஏற்ற முடியாது. எனக்கு நேரம் இல்லை என்றாலும் பரவாயில்லை. தினமும் காலையில் இந்த மந்திரத்தை மூன்று முறையாவது சொல்லி பழகுங்கள். ரேணுகாதேவி உங்களோடு துணையாகவே இருப்பாள்.
எவ்வளவு பெரிய போராட்டம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அது மாறும். நல்ல நிலைமைக்கு உங்களுடைய வாழ்க்கை வரும். போராட்டத்தை தாண்டி உங்களுடைய வாழ்க்கையை ஓஹோ என மாற்றுவதற்கு உங்களை செல்வந்தர்களாக உயர்த்துவதற்கு அந்த ரேணுகாதேவி நிச்சயம் உங்களுக்கு துணையாக நிற்பாள்.
பிள்ளைகள் தேர்வு எழுத செல்கிறார்களா, இந்த மந்திரத்தை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். கணவருக்கு இன்டர்வியூ இருக்கா இந்த மந்திரத்தை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் கணவருக்கு புது ஆர்டர் கிடைக்க வேண்டுமா. இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நோய்நொடி தீர வேண்டுமா இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த பிரச்சனைக்குத்தான், இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது.
இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி கழிய வெண்கடுகு பரிகாரம்
உங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், அம்மா ரேணுகா என்று கூப்பிட்டு பாருங்களேன். கூப்பிட்ட குரலுக்கு அவள் வருகிறார்களா இல்லையா என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். நம்பிக்கையோடு ரேணுகா தேவியை கூப்பிட வேண்டும் அவர் என்றென்றும் உங்களுக்கு வாழ்க்கை துணையாக நிற்பாள். ஒரு தாயைப் போல உங்களை வழிநடத்திச் செல்வாள் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.