- Advertisement -

முருகன் மற்றும் சிவனின் அருள் கிடைக்க

- Advertisement -

இன்று மாசி மகம் இன்றைய தினம் பலவிதமான தெய்வங்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தகப்பனுக்கே உபதேசம் செய்த தகப்பன் சுவாமியான முருகப்பெருமானுக்கும் அந்தப் பிரணவ மந்திரத்தை சிஷ்யனாக இருந்து கேட்ட சிவபெருமானுக்கும் மிகவும் உகந்த நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த நாளில் எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் சிவன் மற்றும் முருகனின் அருளைப் பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகன் மற்றும் சிவனின் அருள் கிடைக்க

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியாததால் பிரம்ம தேவரை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார் என்றும் அப்படி அடைத்ததன் பலனால் பிரம்மதேவரால் படைப்புத் தொழிலை செய்ய இயலவில்லை என்றும் அதனால் உலகமே ஸ்தம்பித்து போனது என்றும் புராணங்கள் கூறுகின்றன. அப்படி ஸ்தம்பித்துப் போன உலகத்தை திரும்பவும் இயல்பு நிலைக்கு மாற்றுவதற்காக முருகப்பெருமானை படைப்பு தொழிலை செய்தாராம்.
அப்படி முருகப்பெருமான் செய்ததன் விளைவால் இந்த உலகத்தில் ஜனனித்த ஒவ்வொரு உயிர்களும் மிகவும் புனிதமான உயிர்களாக மாறியதால் எமதர்ம ராஜனுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டதாம்.

- Advertisement -

இதை அறிந்த சிவபெருமான் முருகப்பெருமானிடம் பிரம்ம தேவரை விடுவிக்கும்படி கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் உனக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று வினவ முருகப்பெருமானோ அதை சிஷ்யனாக இருந்து கேட்பதாக இருந்தால் கூறுகிறேன் என்று கூறினாராம். அப்படி சிவபெருமான் சிஷ்யனாக இருந்து முருகப்பெருமான் குருவாக இருந்து ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த நாளாக தான் இந்த மாசி மகம் நாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் அந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் முருகப் பெருமானே குருவாக இருந்து நமக்கு உபதேசித்ததாக பொருள்படும் என்று கூறப்படுகிறது.

சாதாரணமாக ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கூட வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு மனதார கூறினாலே முருகப்பெருமானின் அருள் நமக்கு கிடைத்துவிடும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானின் மந்திரத்தை கூறினோம் என்றால் இவர்கள் இருவரின் அருளையும் நம்மால் பெற முடியும். அப்படி இவர்களின் அருளைப் பெறுவதற்கு இன்று இரவு 12 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

வெறும் தரையில் அமர்ந்து கூறக்கூடாது. ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். அந்த தீபத்திற்கு முன்பாக ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை மட்டும் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த தண்ணீரை பார்த்தவாரோ அல்லது அந்த தீபத்தை பார்த்தவாரோ முருகன் மற்றும் சிவபெருமானின் இந்த இரண்டு மந்திரங்களை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு பாராயணம் செய்து முடித்த பிறகு அந்த தண்ணீரை எடுத்து குடித்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மந்திர உச்சாடலுக்குரிய பலன் கிடைப்பதோடு சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானின் அருளையும் நம்மால் பெற முடியும்.

மந்திரம்

“ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சௌம் சரவணபவ”

இதையும் படிக்கலாமே:செல்வம் சேர மாசி பௌர்ணமி பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த இரண்டு மந்திரங்களை முழுமனதோடு இன்று இரவுக்குள் கூறுபவர்களுக்கு சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு முருகப்பெருமானே நமக்கு குருவாக இருந்து நல்வழிப்படுத்துவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -