நாளை மாசி மாதம் பௌர்ணமி தினம். இந்த பௌர்ணமி நாளில், இந்த பிரபஞ்சம் முழுவதும் இறை ஆற்றல், நேர்மறை ஆற்றல் முழுமையாக நிறைந்து இருக்கும். இந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் எல்லாம் பல மடங்கு நேர்மறையான பலன்களை நமக்குத் தரும். அந்த வகையில் இன்று இரவு, அதாவது புதன்கிழமை (12-03-2025) இரவு செய்ய வேண்டிய எளிமையான, ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பௌர்ணமி பரிகாரம்
நாளைய தினம் வியாழக்கிழமை 13-3-2025 பௌர்ணமி திதி வரவிருக்கிறது. இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாக மகாலட்சுமியை மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு சின்ன கிண்ணத்தில், இரண்டு கைப்பிடி கல் உப்பு, அந்தக் கிண்ணம் நிரம்பும் அளவுக்கு கல் உப்பு போட்டுக் கொள்ளவும். அதன் மேலே கொஞ்சம் மஞ்சள் பொடியை தூவிக் கொள்ளவும்.
இந்த கிண்ணத்தை அப்படியே கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமியை மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி வீட்டிற்குள் பணவரவு இருக்க வேண்டும். செல்வ கடாட்சம் உயர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கிறது என்றால் அந்த பெண் பிள்ளைகளுக்கு நிறைய தங்க நகை சேர வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளலாம் சிறப்பு. அடமானத்தில் ஏதேனும் நகை இருந்தால் அந்த அடமான நகையை மீட்க வேண்டும். அடமானத்தில் சொத்து இருந்தால் அதை மீட்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
கையில் உப்பு கிண்ணத்தை வைத்து மகாலட்சுமியை வேண்டி குலதெய்வத்தை நினைத்து இந்த கிண்ணத்தை அப்படியே கொண்டு போய் நிலை வாசலுக்கு வெளியில் வைத்து விட்டு வர வேண்டும். அவ்வளவுதான். உங்களுடைய வீட்டில் நிலை வாசல் கதவு இருக்கும். அதை திறந்தவுடன் வரவேற்புரை வரும் அல்லவா அந்த நிலை வாசல் படியில் வைத்தால் போதும்.
ரோட்டுக்கு பக்கத்தில் மெயின் கேட் இருக்கிறது என்றால் அந்த இடத்தில் இந்த உப்பை வைக்க வேண்டாம். உங்கள் நிலை வாசல் பணியில் அதாவது நிலை வாசல் சட்டம் வைத்து, நிலை வாசல் கால் வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த இடத்தில் இந்த உப்பு கிண்ணத்தை வைத்து விடுங்கள். (அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் இதை நிலை வாசலுக்கு வெளிப்பக்கம் வைக்க முடியாது. எல்லோரும் என்ன என்று கேட்பார்கள். அதனால் நிலை வாசலுக்கு உள்பக்கம் இதை வைத்துக் கொண்டாலும் தவறில்லை).
இரவு பரிகாரம் முடிந்து விட்டது. நாளை பௌர்ணமி பிறக்கும். நாளைய தினம் அதிகாலை 6:00 மணிக்கு முன்பாக சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து வாசல் தெளிக்கும் தண்ணீரில் இந்த உப்பை, மஞ்சள் தூளை கொட்டி நன்றாக கரைத்து, இந்த தண்ணீரை நிலை வாசலில் தெளித்து அழகாக ஒரு கோலம் போட்டு விடுங்கள் அவ்வளவுதான். (உங்க வீட்டு வாசலில் டைல்ஸ் ஒட்டி இருக்கா இந்த தண்ணீரை ஒரு துணியில் நனைத்து அந்த டயல் செய்து துடைத்து கோலம் போடுங்கள்).
இதையும் படிக்கலாமே: மாசி மகம் முருகர் வழிபாடு
இந்த பரிகாரத்தை செய்தால், உங்கள் வீட்டில் தரித்திரம் என்பதே இருக்காது. பண கஷ்டம் வராது. வீண் விரைய செலவு ஏற்படாது. தங்க நகை அடமானக் கடைக்கு செல்லாது. வருமானத்திற்கு எந்த குறைவும் இருக்காது. மகாலட்சுமி அம்சம் உங்கள் வீட்டில் நிலையாக தங்கும். இந்த பரிகாரத்தை மற்ற நாள் செய்தாலும் தவறு கிடையாது. இருந்தாலும் பௌர்ணமி அன்று இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பான பலனைத் தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.