
கார்த்திகை மாதம் என்பது முருகப்பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தில் திங்கட்கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானையோ அல்லது சிவபெருமானையோ வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சோமவார விரதத்தை இருக்கும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்
சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒருவரே. தன்னுடைய பக்தர்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில் அந்த கஷ்டங்கள் தீர வேண்டும் என்றால் இந்த சோமவார விரதத்தை இருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியிருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட சோமவாரம் என்பது திங்கட்கிழமை குறிக்கிறது. சோமனான சந்திர பகவான் தன்னுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதற்காக சிவபெருமானை வழிபாடு செய்தார் என்பதால் திங்கட்கிழமை தோறும் யாரொருவர் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.
வருடம் முழுவதும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை விரதம் இருந்து சிவபெருமானையோ அல்லது முருகப்பெருமானையோ வழிபாடு செய்தால் அவர்களுக்கு கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. சிவ பெருமானுக்குரிய எண்ணாக கருதப்படுவது ஐந்து. அதனால் கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து திங்கட்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எந்த முறையில் விரதம் இருக்க முடியுமோ அந்த முறையில் விரதம் இருந்து கொள்ளலாம்.
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமான் அல்லது முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்களுக்கு முன்பாக இரண்டு நெய்தீபங்களை ஏற்றி வைத்து வில்வத்தால் “சிவாய நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வத்தால் திங்கட்கிழமையில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு கோடி மலர்களை வைத்து அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இப்படி அர்ச்சனை செய்து முடித்துவிட்டு சிவபுராணத்தையும் கந்த சஷ்டி கவசத்தையும் பாராயணம் செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ கோரிக்கை என்னவோ அதை முழு மனதோடு இறைவனிடம் கூறி விரதத்தை இருக்க ஆரம்பிக்க வேண்டும். மாலையிலும் இதே போல் வில்வ அர்ச்சனை செய்து வழிபாடை செய்ய வேண்டும். திங்கட்கிழமை தோறும் மௌன விரதம் இருந்து வழிபாடு செய்வதும் நல்ல பலன்களைத் தரும். மேலும் அன்றைய தினத்தில் தங்களால் இயன்ற அளவு பிறருக்கு அன்னதானம் செய்வது சிவப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெற உகூறப்படுகிறது. இப்படி கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திங்கட்கிழமையில் இந்த முறையில் வில்வ அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இது நடக்கவே நடக்காது என்று எதை நினைத்து இருந்தார்களோ அது கூட நடக்கும் என்று கூறப்படுகிறது
இதையும் படிக்கலாமே:கடன் பிரச்சினை தீர்க்கும் கார்த்திகை மாத தீப வழிபாடு
பல அற்புதமான பலன்களை தரக்கூடிய இந்த சோமவார விரதத்தை இந்த முறையில் இருந்து சிவபெருமானையும் முருகப்பெருமானையும் முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.