- Advertisement -

நல்ல காலம் பிறக்க வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

ஒவ்வொரு நாளும் சிறப்பு மிகுந்த நாளாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். அந்த நாளோடு மட்டுமல்லாமல் அதற்குப் பிறகு வரக்கூடிய அனைத்து நாட்களுமே நல்ல நாட்களாக அமைய வேண்டும். நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாக வேண்டும், நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். இருப்பினும் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு நம்முடைய முயற்சிகள் தோல்வி அடைவதற்கோ அல்லது பாதியிலேயே நிற்பதற்கோ பலவிதமான வாய்ப்புகள் உண்டாகும். இதை நாம் தரித்திரம் என்றும் கூறலாம். நமக்கு இருக்கக்கூடிய கெட்ட காலம் என்றும் கூறலாம்.

நம்முடைய கெட்ட காலங்களை நீக்கி நல்ல காலமாக மாற்றுவதற்கு நம்முடைய கடுமையான முயற்சியோடு தெய்வத்தின் அருளும் கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படி தெய்வத்தின் அருளை பெறுவதற்கு சிறப்பு மிகுந்த நாட்கள் இருக்கின்றன. அந்த சிறப்பு மிகுந்த நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரமும் நமக்கு இருக்கக்கூடிய மோசமான நிலையை மாற்றி நமக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை உண்டாக்கும். அப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலையை உண்டாக்குவதற்கும் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல காலம் பிறப்பதற்கும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சனிக்கிழமை அன்று நாம் வாங்க வேண்டிய இரண்டு பொருட்கள் நமக்கு வசந்த காலத்தை உண்டாக்கும். அந்த பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நல்ல காலம் பிறக்க பூஜை

பொதுவாகவே ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு விதமான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வந்து வைப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் தான் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை நவராத்திரியின் ஆறாவது நாள் நாம் இந்த இரண்டு பொருட்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு வாங்கி வந்து வைப்பதன் மூலம் நல்ல காலம் நமக்கு பிறந்துவிடும் என்று கூறப்படுகிறது. அந்த பொருட்கள் தான் மஞ்சள் தூள் மற்றும் வாசனை மிகுந்த மலர்கள்.

இந்த இரண்டு பொருட்களையும் சனிக்கிழமை அன்று காலை 7:00 மணியிலிருந்து 8 மணிக்குள்ளோ அல்லது மாலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ வீட்டிற்கு வாங்கி வரவேண்டும். அந்த நேரத்தில் வீட்டை விட்டு கிளம்பி அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று இந்த இரண்டு பொருட்களையும் எந்தவித பேரம் பேசாமல் வாங்கி வந்து இந்த நேரம் முடிவதற்குள் வீட்டிற்குள் கொண்டு வந்த வீட்டில் இருக்கக் கூடிய சுமங்கலி பெண்களின் கையில் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மஞ்சள் தூளை நாம் சமையலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பூஜை தொடர்பான விஷயத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மலர்களை சுவாமி படங்களுக்கும் அணிவிக்கலாம் பெண்களும் அணிந்து கொள்ளலாம். மிகவும் எளிமையான இந்த இரண்டு பொருட்களை புரட்டாசி சனிக்கிழமை அன்று குறிப்பிட்ட இந்த நேரத்தில் வாங்கி வந்து வீட்டில் இருக்கக்கூடிய பெண்களின் கையில் தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை நாம் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இனிமேல் பிறக்கக்கூடிய காலங்கள் அனைத்தும் சிறப்பான நல்ல காலமாக மாறும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை வழிபாடு

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை புரட்டாசி சனிக்கிழமை அன்று வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம் நல்ல காலம் நமக்கு பிறக்கும். முழு நம்பிக்கையோடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -