- Advertisement -
- Advertisement -

நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் ஆவணி மாத வாஸ்து நாள். இந்த வாஸ்து நாளில், வாஸ்து பகவானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதேபோல புது வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் நாளை பூமி பூஜை போடுவார்கள், அதற்கு உண்டான நல்ல நேரம் என்ன?

சொந்த வீடு வாங்க வேண்டும், வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் நீங்க வேண்டும், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும், சொந்த நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் நாளைய தினம் எந்த நேரத்தில், வாஸ்து பகவானை நினைத்து என்ன வழிபாடு செய்வது, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வாஸ்து பகவான் வழிபாடு

22.8.2024 வாஸ்து நேரம்.
நாளைய தினம் வியாழக்கிழமை 7:23 மணியிலிருந்து 7:59 மணி வரை வாஸ்து நேரம் இருக்கிறது. இந்த 33 நிமிடத்தில் நீங்கள் பூமி பூஜை செய்வதாக இருந்தால் செய்வது நல்லது. கூடிய சீக்கிரம் உங்கள் நிலத்தில் பூமி பூஜை போட வேண்டும் என்றால் ஒரு செங்கலை வாங்கி வைத்து நாளை தினம் வீட்டில் இதே நேரத்தில் பின் சொல்லக் கூடிய பூஜையை செய்ய வேண்டும். (ரியல் எஸ்டேட் செய்பவர்கள், வீடு கட்டி விற்பவர்கள், நிலம் சம்பந்தப்பட்ட பிசினஸ் செய்பவர்கள் எல்லாம், நாளை நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் உங்களுக்கு நிறைய லாபம் பெறுக.)

கடையிலிருந்து பணம் கொடுத்து ஒரு நல்ல செங்கல்லாக வாங்கிக் கொள்ளுங்கள். அந்த செங்கல்லை முதலில் நல்ல தண்ணீர் போட்டு கழுவி விட வேண்டும். நாளைய தினம் மேலே சொல்லப்பட்டிருக்கும் வாஸ்து நேரத்தில்தான் இந்த பூஜையை வீட்டில் செய்ய வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மனதார குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. நிலம் வாங்க வேண்டுமா, அல்லது வாங்கிய நிலத்தில் வீடு கட்ட வேண்டுமா, இல்லை கட்டி இருக்கும் உங்கள் வீட்டில் வாசுதோஷ பிரச்சனையா, அல்லது நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள், நீங்கள் இருக்கும் வீட்டில் வாஸ்து தோஷத்தால் உங்களுக்கு நிம்மதி கெட்டு போயிருக்கிறதா, எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனையை மனதில் நினைத்து இந்த செங்கல்லை ஒரு தாம்பல தட்டில் வையுங்கள். ஒரு கிண்ணத்தில் சந்தனம் குங்குமம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

‘ஓம் வாஸ்து பகவானே நமோ நமஹ!’ என்ற மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் சந்தனத்தையும் குங்குமத்தையும் தொட்டு அந்த செங்கல்லுக்கு பொட்டு வைக்க வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் பூக்களை செங்கலுக்கு மேல் போட்டு வைத்து விளக்கு ஏற்றி, கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை மேற்கொள்ளவும்.

- Advertisement -

வாஸ்து பகவானுக்கு இரண்டு வாழைப்பழங்கள் நெய்வேதியும் வைத்தாலும் போதும். மேல் சின்ன முறையில் நாளைய தினம் ஒரு செங்கலை வைத்து எளிமையான பூஜையை உங்கள் வீட்டில் செய்து, அந்த செங்கல்லை பூஜை அறையில் வைத்து தினமும் வாஸ்து பகவானை மனதார நினைத்து உங்கள் பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், நீங்கள் வைத்த வேண்டுதல் ஒரு வருடத்திற்குள் நிச்சயம் பலிக்கும்.

இதையும் படிக்கலாமே: வரங்களைத் தரும் வரலட்சுமி வீட்டிற்கு வர

வேண்டுதல் பலித்து நீங்கள் நிலத்தில் வீடு கட்ட தொடங்கி விட்டால், இந்த செங்கலை எடுத்து பூமி பூஜையின் போது பயன்படுத்தலாம். இல்லையென்றால் இந்த செங்கல்லை பத்திரப்படுத்தி உங்கள் வீட்டின் பரண் மேலே வைத்துக் கொள்ளலாம். இந்த வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சினையால் வரும் கஷ்டங்கள் கூட நிவர்த்தி ஆகும். இவ்வாறாக வாஸ்து பகவானின் அருள் ஆசியை பெறுவதற்கு நாளைய தினம் நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த பூஜையை செய்து பயன்பெறுங்கள்.

- Advertisement -