
ஆழகால விஷத்தை அருந்தி இந்த உலகத்தை காப்பாற்றிய தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமான் ஆழகால விஷத்தை அருந்தி நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு இடையே நடனம் ஆடியதை தான் பிரதோஷ நாள் என்றும் பிரதோஷ நேரம் என்றும் கூறுகிறோம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நேரத்தில் சிவபெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நம்மை அழிக்கக்கூடிய துன்பங்களை நீக்கி நன்மைகளை வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது. அதிலும் புதன்கிழமையோடு சேர்ந்து வரும் இந்த பிரதோஷ நாளை தவறவிடாமல் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். இன்றைய நாளில் கூற வேண்டிய மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாரத்தில் மொத்தம் ஏழு நாட்கள் வரும். ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு விதமான தெய்வத்தை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு மிகுந்த ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களில் ஏழு கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதை பொறுத்து அன்றைய தினத்தில் வரக்கூடிய திதியையும் வைத்து நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்மை போல கொடுத்து வைத்தவர்கள் வேறு யாராகவும் இருக்கவே முடியாது. அந்த வகையில் இன்று புதன்கிழமை. புதன் பகவானுக்கு அதிபதியாக திகழ்பவர் மகாவிஷ்ணு. இன்று பிரதோஷம் இது சிவபெருமானுக்குரியது. அதனால் இன்றைய நாளில் நாம் மகாவிஷ்ணுவையும் அதேசமயம் சிவபெருமானையும் வழிபாடு செய்ய வேண்டும். இவர்கள் இருவரையும் ஒரு சேர வழிபாடு செய்வதற்குரிய வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை மாலை 4:30 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். பத்து நிமிடம் மட்டும் ஒதுக்கினால் போதும். மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமானின் அருளை நம்மால் பெற்று விட முடியும். இந்த வழிபாட்டை வீட்டில் இருந்து தான் செய்ய வேண்டும், ஆலயத்தில் இருந்து தான் செய்ய வேண்டும் என்ற இந்த நிபந்தனையும் கிடையாது. நாம் வேலை செய்யும் இடத்தில் இருந்து கொண்டு கூட கூறலாம். மன அமைதியுடன் செய்ய வேண்டும். அது ஒன்றுதான் நிபந்தனை.
இந்த வழிபாட்டை செய்வதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. மாதவிடாய் சமயத்தில் இருப்பவர்களும் சரி பிறப்பு, இறப்பு தீட்டில் இருப்பவர்களும் சரி, தெரியாமல் அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக முகம், கை, கால்களை மட்டும் சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் அமரலாம்.
முதலில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும், நந்தியம்பெருமானையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு மகாவிஷ்ணுவை நினைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் என்னுடன் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து விட்டு பின்வரும் இந்த மந்திரத்தை 10 நிமிடம் நிறுத்தி நிதானமாக கூற வேண்டும். பத்து நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் இவர்கள் நால்வரையும் மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
“ஹரி ஓம் நமசிவாய”
இதையும் படிக்கலாமே: காமாட்சி அம்மன் விளக்கு பலன்
சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் ஒருசேர வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான பலனை தரக்கூடிய இந்த மந்திரத்தை புதன்கிழமையோடு சேர்ந்து வரும் பிரதோஷ நாளில் கூறுபவர்களுக்கு இவர்கள் இருவரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்