- Advertisement -

நன்மைகள் தேடி வர ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

இன்று வளர்பிறை அஷ்டமி இன்றைய தினத்தில் கால பைரவரை நாம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. காலத்திற்கு தலைவராகவும், நவகிரகங்களுக்கு முதன்மையானவருமாக திகழக்கூடியவராக கால பைரவர் திகழ்கிறார். காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விலக்கும் வல்லமை படைத்தவராகவே காலபைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட கால பைரவருக்கு நாம் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நன்மைகள் தேடி வர தீபம்

வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டு அஷ்டமிகள் ஒவ்வொரு மாதமும் வரும். தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி தினத்தில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். வளர்பிறையில் வரக்கூடிய அஷ்டமி தினத்தில் நமக்கு பணம் சேர வேண்டும், புகழ் சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எந்த அஷ்டமியாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் காலபைரவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கஷ்டங்களும் கவலைகளும் நீங்கும், நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவோம்.

- Advertisement -

அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய அஷ்டமிக்கு அதீத பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று தைமாத வளர்பிறை அஷ்டமி இதை பீஷ்மாஷ்டமி என்றும் கூறுவார்கள். தான் செய்த பாவத்திலிருந்து விலகி மோட்சத்தை பீஷ்மர் அடைந்த நாள் தான் இந்த பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த நாளில் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் காலபைரவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்மை தேடி அனைத்து விதமான நன்மைகளும் வரும் என்று கூறப்படுகிறது.

இந்த தீபத்தை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு பஞ்ச தீபம் என்று பெயர். ஐந்து அகல்விளக்குகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய், ஒரு அகல் விளக்கில் நெய், ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய், ஒரு அகல் விளக்கில் இலுப்ப எண்ணெய், ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் என்று ஐந்து எண்ணெய்களை தனித்தனியாக ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இதில் பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதுதான் பஞ்ச தீப வழிபாடு.

- Advertisement -

இப்படி ஐந்து தீபங்களாக ஏற்ற இயலாது என்று நினைப்பவர்கள் சம அளவு இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஒரே தீபமாகவும் ஏற்றலாம். இந்த தீபத்தில் நாம் இன்னும் ஒரு பொருளை சேர்த்தோம் என்றால் அந்த பொருளின் பலனால் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதுதான் மிளகு. இது காலபைரவருக்கு உகந்த பொருளாக கருதப்படுகிறது. நட்சத்திரங்கள் 27 இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்த 27 நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரம் தான் நம்முடைய நட்சத்திரமாக இருக்கும். அதனால் ஒரு வெள்ளை நிற துணியில் 27 மிளகுகளை போட்டு மூட்டையாக கட்டி நாம் ஏற்றி வைத்திருந்த தீபத்திற்குள் போட்டு விட வேண்டும்.

ஒரு தீபம் ஏற்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த தீபத்தில் போட்டுவிடலாம். ஐந்து தீபம் ஏற்றுவதாக இருக்கும் பட்சத்தில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றோம் அல்லவா? அதில் போட்டு விட வேண்டும். அந்த மிளகு முழுமையாக எரிந்து முடிய வேண்டும். ஒருவேளை அந்த மிளகு முழுமையாக எரியவில்லை என்னும் பட்சத்தில் அதில் சிறிது கற்பூரம் வைத்து முழுமையாக எரித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:தை கிருத்திகை முருகன் கோவில் விளக்கு பரிகாரம்

இந்த முறையில் நாம் இன்றைய தினத்தில் தீபமேற்றி காலபைரவரை மனதார நினைத்து வழிபாடு செய்யும் பொழுது காலபைரவரின் அருளால் நம்முடைய கஷ்டங்கள் நீங்கி, நல்ல முன்னேற்றமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -