நாளைய தினம் தை கிருத்திகை. முருகனுக்கு வரக்கூடிய விசேஷ நாட்களில் இந்த நாள் ரொம்ப ரொம்ப முக்கியமான நாள். நாளைய தினம் கட்டாயம் ஒவ்வொருவரும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும். உங்களால் என்னென்ன பொருட்கள் வாங்கி கொடுக்க முடியுமோ, அதை எல்லாம் வாங்கிக் கொடுங்கள்.
இந்த பொருள்தான் வாங்கி தர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. சில கோவில்களில் பால் குடம் எடுக்கும் வழக்கம் இருக்கும். அப்படி என்றால் அந்த பால்குடம் வைபவத்தில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த விஷயங்களை அந்த கோவிலுக்கு செய்யுங்கள். நிச்சயம் முருகப்பெருமான் உங்கள் வாழ்வில் நல்லதொரு விடிவு காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.
உங்களுடைய வாழ்வில் இருக்கும் தீராத துன்பங்கள் தீர வேண்டும் என்றால், இந்த தை கிருத்திகை நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரம் இருக்கிறது. 6 எலுமிச்சம் பழங்கள் பேரம் பேசாமல் வாங்கிக் கொள்ளவும். கருப்பு புள்ளிகள் இருக்கக் கூடாது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் 6 எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொள்ளுங்கள். அப்படியே வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். உங்களுடைய கைகளில் அந்த 6 எலுமிச்சம் பழத்தையும் வைத்துக்கொண்டு, ஒரே ஒரு வேண்டுதலை முருகப்பெருமானிடம் சொல்லுங்கள் போதும்.
பிறகு அந்த 6 எலுமிச்சம் பழங்களையும் குருக்களிடம் கொடுக்க வேண்டும். அவர் அர்ச்சனைக்காக கொண்டு வரும் தட்டின் மேலே அந்த பழத்தை வைத்து விடுங்கள். இதை முருகனின் பாதத்தில் வைத்து விடும்படி சொல்லுங்கள். அவர் அதை கொண்டு போய் முருகனுடைய பாதத்தில் சேர்த்து விடுவார். உங்களுடைய வேண்டுதலும், முருகனுடைய செவிகளுக்கு சென்று விடும். அதன் பிறகு முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். எத்தனை விளக்குகள். உங்களுக்கு எத்தனை வயசு. அத்தனை விளக்குகள் ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு.
விளக்கை ஏற்றி முடித்துவிட்டு, உங்களுக்கு எத்தனை வயதோ அத்தனை முறை முருகப்பெருமானை பிரதக்ஷணம் வரவேண்டும். நாளைய தினம் முருகன் கோவிலில் மேல் சொன்ன விஷயங்களை செய்து விட்டு, முருகனுக்கு ஒரு நமஸ்காரம் போட்டு, அந்த கோவிலில் 10 நிமிடம் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை வைத்துப் பாருங்கள்.
நீங்கள் வைத்த வேண்டுதல் அடுத்த தை கிருத்திகைக்குள் நிச்சயம் நடக்கும். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் தேவையென்றால், அந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருப்பவர்கள். கட்டாயம் கிருத்திகை அன்று எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. வெறும் தண்ணீரை மட்டும் பருகி, விரதம் இருந்து பாருங்கள். அடுத்த வருடம் தை கிருத்திகைக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
இப்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரவிருக்கிறது. 10வது படிக்கும் மாணவர்கள், 11வது படிக்கும் மாணவர்கள், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எல்லாம் நாளை முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு போட வேண்டும். பெற்றவர்களுடைய துணையோடு உங்களுக்கு எத்தனை வயது, அத்தனை விளக்குகளை முருகப்பெருமானுக்கு ஏற்றி, உங்களுக்கு இப்போது எத்தனை வயது நிறைவடைந்து இருக்கிறதோ, அத்தனை முறை கோவிலை சுற்றி வந்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: கெட்ட சகுனங்கள் ஏழு
படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்கள் எடுக்க எல்லா நல்ல வழியும் கிடைக்கும். நம்பிக்கையோடு மேலே சொன்ன வழிபாடுகளை பின்பற்றுபவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.