- Advertisement -

வானியல் மற்றும் ஜோதிட சாத்திரத்தில் சிகரம் தொட்ட நமது நாட்டின் முன்னோர்கள் ஒரு மனிதன் விண்ணில் இருக்கும் ஒன்பது கோள்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு தான் இருக்கிறன் என்கிற உண்மையை கண்டறிந்தனர். இந்த ஒன்பது கிரகங்களால் மனிதர்களுக்கு தோஷம் ஏற்படுவதை கண்டறிந்து அதற்கு நவகிரக தோஷம் என்று பெயரிட்டனர். இந்த நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்தால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

நவகிரக தோஷ பரிகாரம்

சூரியனின் தோஷம் விலகுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய உதயத்தின் போது, சூரியனுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். தஞ்சைக்கு அருகில் இருக்கும் “சூரியனார் கோவில்” தலத்திற்கு ஒரு ஞாயிற்று கிழமை அன்று சென்று வழிபட வேண்டும்.

- Advertisement -

சந்திரனின் தோஷம் நீங்குவதற்கு பௌர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு வெள்ளைத்தாமரை பூவை சமர்ப்பித்து, வெண்பொங்கலை படையலாக படைத்து வழிபட வேண்டும். மேலும் சந்திர பகவானுக்குரிய நவகிரக கோவிலான “திங்களூர் சந்திர பகவான்” கோவிளுக்கு ஒரு பௌர்ணமி தினத்தில் சென்று வழிபட வேண்டும்.

செவ்வாய் பகவானின் தோஷம் நீங்குவதற்கு செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் சிகப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. ஒரு செவ்வாய்க்கிழமையன்று “திருச்செந்தூர் கோவில்” சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

- Advertisement -

புதன் பகவானின் தோஷம் நீங்குவதற்கு புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று பெருமாளுக்கு பச்சைப்பயிரால் செய்யப்பட்ட உணவை நிவேதித்து வழிபட வேண்டும். ஒரு புதன் கிழமை அன்று “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்” சென்று வழிபடுவதால் புதன் கிரக தோஷம் நீங்கும்.

குரு பகவானின் தோஷம் நீங்க வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களை சாற்றி, நெய் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். ஒரு வியாழக்கிழமையன்று “ஆலங்குடி குருபகவான் கோவில்” சென்று வழிபடுவதால் குருவின் தோஷம் நீங்கும்.

- Advertisement -

சுக்கிரன் பகவானின் தோஷம் விலக வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு பதார்த்தங்களை படைத்து சுக்கிர பகவானை வழிபட வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமையன்று “கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில்” சென்று தரிசிக்க சுக்கிரனின் தோஷங்கள் விலகும்.

சனிபகவானின் தோஷம் நீங்க உடல் ஊனமுற்றவர்கள், ஏழைகள், உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் ஆகியோர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். ஒரு சனிக்கிழமையன்று “திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்” சென்று சனீஸ்வரை வழிபட சனி தோஷம் நீங்கும்.

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் ஆவார்கள். சர்ப்பத்தின் சாரம் கொண்டவர்கள். முதியவர்கள் மற்றும் துறவிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த கிரகங்களின் தோஷம் குறையும். மேலும் செவ்வாய் அல்லது சனிக்கிழமையன்று “ஸ்ரீ காளஹஸ்தி” கோவிலுக்கு சென்று ராகு-கேது பூஜை செய்து வழிபட ராகு மற்றும் கேது கிரகங்களின் தோஷம் குறையும்.

இதையும் படிக்கலாமே:
புதன் பகவானால் நன்மை அடைய பரிகாரம்

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Navagraha pariharam in Tamil. It is also called as Navagraha dosha remedies in Tamil or Navagraha dosha valipadu in Tamil.

- Advertisement -