- Advertisement -
மந்திரம்

தோஷம் போக்கும் நவகிரக ஸ்தோத்திரம்

ஜோதிடம் என்பது வானில் இருக்கும் கிரகங்கள், நட்சத்திரங்கள் இதர கால நிலைகளை அடிப்படையாக கொண்டு ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்பட இருக்கிற நன்மை தீமை பலன்களை பற்றி கூறுவதாகும். இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அதன் சாதக, பாதக அமைப்பிற்கு ஏற்றவாறு மனிதர்களுக்கு நன்மை தீமை கலந்த பலன்களை தருகின்றது. நவகிரகங்களினால் நமக்கு ஏற்படவிருக்கின்ற நன்மையான பலன்களை அதிகரித்து, தீமையான பலன்களை குறைக்க திருஞான சம்பந்தர் இயற்றிய “கோளறு திருப்பதிகத்தின்” தமிழ் ஸ்தோத்திரம் இதோ.

நவகிரக ஸ்தோத்திரம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

- Advertisement -

ஒன்பது கோள்களையும் போற்றி துதிக்கின்ற இந்த கோளறு திருப்பதிக ஸ்தோத்திரத்தை சனிக்கிழமையன்று காலையில், கோவிலிலுள்ள நவ கிரக சந்நிதியில் முடிந்த வரை அனைத்து கிரகங்களுக்கென்று ஒரு பிரத்தியேக தீபம் ஏற்றி, நவகிரக ஸ்லோகத்தை 9 முறை அல்லது 27 முறை துதித்து வணங்க அனைத்து நவகிரக நாயகர்களும் தங்களை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு நற்பலன்களை மட்டுமே வழங்குவார்கள். நவகிரகங்களில் எந்த ஒரு கிரகத்தினால் ஏற்பட்டிருக்கும் தோஷமும் ஒருவருக்கு நீங்கும்.

உலகில் வாழுகின்ற மனிதர்கள், பிற உயிர்கள் இன்ன பிறவற்றின் மீதெல்லாம் விண்ணில் இருக்கும் சூரியன் முதற்கொண்டு எல்லா நவகிரகங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒரு மனிதனுக்கு எல்லா நேரங்களிலும் அனைத்து கிரகங்களும் நற்பலன்களை வழங்குவதில்லை. ஒரு கிரகம் மிகச்சிறந்த நற்பலன்கள் வழங்கும் அதே நேரத்தில் மற்றொரு கிரகம் சில தீய பலன்களை ஏற்படுத்தி நன்மையான பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தடுத்து விடும். இந்த தமிழ் ஸ்தோத்திரத்தை கூறி நவகிரகங்களை வழிபட அக்குறைகள் யாவும் நீங்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வெற்றி தரும் கணபதி 108 போற்றி

இது போன்ற மேலும் பல தமிழ் மந்திரங்கள், போற்றிகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Navagraha stotram in Tamil lyrics and also we explained the Navagraha stotram benefits in Tamil.

- Advertisement -