- Advertisement -

நவராத்திரி 5வது நாள் வாராஹி அலங்காரம்

- Advertisement -

நாளை 26-9-2025 பஞ்சமி திதி வரவிருக்கிறது. இது நவராத்திரியின் ஐந்தாவது நாள். இந்த நாளில் கூடுதல் சிறப்பு என்ன என்றால், வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து பஞ்சமி திதி வந்திருப்பது தான். அந்த லட்சுமி ஸ்வரூபமாக திகழும்  வாராகி அன்னையை பின் சொல்லக்கூடிய முறையில் அலங்கரித்து, வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் வாழ்க்கையும் வாழ்நாள் முழுவதும் அலங்காரத்தோடு அழகாக இருக்கும். வாராகியை அலங்கரிக்க வேண்டும் என்று சொன்னதுமே பயந்திடாதீங்க.

தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் பட்டு ஆடை என்றுமே அவள் கேட்க மாட்டாள். உங்களுடைய அன்பும் ஆசையும் நம்பிக்கையோடு சேர்த்து இந்த ஒரு எளிமையான அலங்காரத்தை அவளுக்கு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை பின்பு அழகாக மாறிவிடும்.

- Advertisement -

நம்மில் பெரும்பான்மையானவர்கள் வீட்டில் வாராஹியின் சிலை அல்லது வாராகியின் திருவுருவப்படம் இருக்கிறது. கட்டாயமாக பஞ்சமி திதி வந்தால் அந்த வாராஹிக்கு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளை தவறாமல் செய்து விடுவோம். இந்த நவராத்திரி வந்திருக்கும் பஞ்சமி திதியில் உங்கள் வழிபாட்டு முறையை பின் சொல்லக்கூடிய முறையில் செய்து பாருங்கள்.

நவராத்திரி 5வது நாள் வாராகி வழிபாடு

வாராகிக்கு மிகவும் பிடித்த பொருள் துளசி இலை, மஞ்சள் தூள், ஏலக்காய், பச்சை கற்பூரம், இந்த நான்கு பொருட்களால் (இந்த 4 பொருள் வராகிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்) வாராஹிக்கு அபிஷேகம் செய்து பின்பு இந்த பொருட்களை எல்லாம் நைசாக அரைத்து, அந்த பொடியை எடுத்து வாராகி நெற்றியில் திலகமாக வைத்து அதற்கு மேலே குங்குமப்பொட்டு வைத்து வாராகிக்கு ஒரு அழகான ஆடை உடுத்தி, உங்களால் முடிந்த ஆபரணங்களை போட்டு, வாசனை நிறைந்த பூ போட்டு அலங்காரம் செய்து வழிபாடு செய்து பாருங்கள். வாராஹி மனம் குளிர்ந்து போவாள்.

- Advertisement -

உங்களிடம் வாராஹியின் சிலை இல்லை என்றால் வாராஹி திரு உருவப் படத்திற்கு, இந்த பொருட்களை எல்லாம் அரைத்து பொட்டு வைத்து அலங்கரிக்கலாம். வாராஹிக்கு அழகாக ஒரு வளையல் மாலை போட்டு சின்னதாக நெய்வேதியும் வைத்து வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயமாக உங்கள் வாழ்க்கையும் அழகாக இருக்கும். வாராகிக்கு மிகவும் பிடித்தது அலங்காரம்.

ஆமாங்க, எந்த அம்மனுக்கு தான் அலங்காரம் பிடிக்காது. அதிலும் நவராத்திரி தினத்தில் அம்பாளுக்கு அழகு செய்து பார்ப்பது தானே வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. நீங்க உங்க வீட்ல இருக்கிற வாராஹிக்கு மேலே சொன்ன முறைப்படி அலங்காரம் செய்து வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும். வாராகி உங்களுடன் இருப்பதை நீங்கள் உணருவீர்கள்.

- Advertisement -

உங்கள் தோழியோடு நெருங்கி நீங்கள் எப்படி பேசுவீர்கள், உங்கள் மனதில் இருக்கும் குறைகளை எப்படி அவளிடம் வெளியே சொல்வீர்கள். அதேபோல வாராகியை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினீர்கள் என்றால், உங்கள் தோழி போல வாராகி மாறி, மீண்டும் அவள் உங்களிடம் பேசத் தொடங்கி விடுவாள். நீங்கள் வாராஹி உணரக்கூடிய பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் மேலே சொன்ன இந்த எளிமையான வழிபாடு உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் கல்லாப்பெட்டி பூஜை

எங்கள் வீட்டில் வாராஹி சிலையோ வாராஹி திருவுருவப்படமோ இல்லை. அவளை பூஜை அறையில் வைப்பதற்கு எங்கள் வீட்டில் அனுமதியும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உங்கள் வீட்டில் ஏதோ ஒரு அம்மன் படம் இருக்கும். அந்த அம்மனை வாராகி யாக பாவித்து, அந்த அம்மனுக்கு மேலே சொன்ன முறைப்படி பொட்டு வைத்து அலங்காரம் செய்து வாராகி வாராகி என்று அந்த அம்மனை கூப்பிட்டு வழிபாடு செய்து பாருங்களேன். உங்கள் வீட்டிற்கும் வாராகி ஓடோடி வருவாள் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by