- Advertisement -
- Advertisement -

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு சொந்தமான நாட்கள். வருகின்ற 9ஆம் தேதி, 10ஆம் தேதி, 11ஆம் தேதி, புதன் வியாழன் வெள்ளி, இந்த மூன்று நாட்களும் உங்களுடைய படிப்பை, திறமையை அறிவாற்றலை மெருகேற்றிக்கொள்ள செய்யவேண்டிய எளிமையான ஒரு வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

படிப்பவர்களுக்கு மட்டும்தான் சரஸ்வதி தேவியின் அருள் கடாட்சம் கிடைக்க வேண்டுமா? நிச்சயம் கிடையாது. எல்லா மனிதர்களுக்குமே சரஸ்வதியின் கடாட்சம் இருந்தால் மட்டும்தான் அவர்களிடம் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை நிலையாக தக்கவைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் எல்லோருமே நவராத்திரியில் வந்திருக்கக்கூடிய இந்த கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக மாணவர்கள் இந்த மூன்று நாட்களும் சரஸ்வதி தேவியை நினைத்து வழிபாடு செய்வது சிறப்பு. நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே கொலு வைத்து பூஜை செய்பவர்களாக இருந்தாலும் சரி நாளையிலிருந்து இந்த 11 வரி மந்திரத்தை, நவராத்திரி கொலு முன்பாக அமர்ந்து, புஷ்பங்களை எடுத்து சரஸ்வதி தேவிக்கு போட்டு பூஜை செய்யலாம். உங்களுடைய வீட்டில் கொலு வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

எல்லோர் வீட்டிலும் சரஸ்வதி படம் இருக்கும். அந்த சரஸ்வதிக்கு வெள்ளை நிற பூக்களால் அலங்காரம் செய்து ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உதிறி புஷ்பத்தால் அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பெரியவர்கள் இந்த மந்திரத்தை சொல்லி பூவை போடுங்கள்‌. நீங்கள் சொல்ல சொல்ல இந்த மந்திரத்தை, உங்களுடைய பிள்ளைகளின் வாயால் சொல்லும் போது அவர்களுக்கு உண்டான சரஸ்வதி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வீட்டிலேயும் இதை செய்ய முடியவில்லை உங்கள் வீட்டு பக்கத்தில் கொலு வைத்திருப்பார்கள். அந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நீங்கள் சொல்ல சொல்ல அந்த கோவிலில் இருக்கும் மற்றவர்களும் இந்த மந்திரத்தை சொல்லட்டும். இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்த பலனும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் அடுத்தவர்களுக்கு சொல்லிக் கொடுத்த பலனும் உங்களை வந்து சேரும்.

ஆக மொத்தம் இரண்டு வகையான புண்ணியத்தை ஒட்டுமொத்தமாக நீங்களே வாங்கிக் கொள்ளலாம். சரி நவராத்திரியின் கடைசி நாட்கள் உச்சரிக்க வேண்டிய அந்த சரஸ்வதி தேவியின் மந்திர வரிகள் என்னென்ன தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நவராத்திரியில் சரஸ்வதி மந்திரம்

ஓம் வரப்பிரதா போற்றி
ஓம் மேதா தேவி போற்றி
ஓம் மஹாவித்யாயை போற்றி
ஓம் பிரம்மஞானைகசாதனா போற்றி

ஓம் மஹாபலா போற்றி
ஓம் மகேஸ்வரியே போற்றி
ஓம் ஞானமுத்ரா போற்றி
ஓம் மாலினி போற்றி

ஓம் மஹாவித்யா போற்றி
ஓம் விமலா போற்றி
ஓம் சந்திரிகா போற்றி

எளிமையான மந்திர வார்த்தைகள் நம்பிக்கையோடு சொல்லுங்கள். நீங்கள் நினைத்ததை எல்லாம் அடைவதற்கு உங்களிடம் இருக்கும் திறமை பல மடங்காக உயர வேண்டும், திறமை உயர உயரத்தான், செல்வ வளத்திலும் நாம் உயர்ந்த மனிதர்களாக மாற முடியும். செல்வம் குவிய குவிய அதை பாதுகாப்பதற்கும் நமக்கு திறமை தேவை. அறிவு தேவை.

இதையும் படிக்கலாமே: கடன் சுமை தீர பரிகாரம்

இந்த திறமை எல்லாம் கொடுப்பவள் சரஸ்வதி தேவி மட்டும்தான். இந்த இனிய நாளில் அவள் பாதங்களை பற்றி கொள்வோம்‌. வரங்களைப் பெற்றுக் கொள்வோம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -