முருகப்பெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படக்கூடியது கிருத்திகை நாள். அன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் விசேஷமான வழிபாடுகள் நடைபெறும். அந்த வழிபாடுகளில் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவோம். அப்படி முருகனின் ஆலயத்திற்கு செல்பவர்கள் அங்கு இருந்து எந்த பொருளை வீட்டிற்கு எடுத்து வந்தால் முருகனின் அருளால் கடன் அனைத்தும் நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப்பெருமானுக்கு உகந்த தினங்கள் பல இருந்தாலும் சில குறிப்பிட்ட தினங்கள் மிகவும் விசேஷமாக கொண்டாடக்கூடிய தினங்களாக திகழ்கிறது. மாதா மாதம் கார்த்திகை நட்சத்திரம் என்பது வரும். அந்த நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படி மாதா மாதம் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாள் அன்று வழிப்பட இயலாதவர்கள் கூட தை கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை நாள் அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்தால் அவர்களுக்கு அந்த ஒரு வருடம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அவ்வளவு சிறப்பு மிகுந்த கிருத்திகை அன்று வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம், ஆலயத்திற்கு சென்றும் வழிபாடு செய்யலாம். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் முருகப்பெருமானுக்கு எந்த நேரத்தில் அபிஷேகங்கள் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த நேரத்திற்கு சென்று வழிபட வேண்டும். அவ்வாறு வழிப்படும்பொழுது அபிஷேகத்திற்காக தங்களால் இயன்ற பொருட்களை வாங்கி தருவது என்பது சிறப்பு.
அதோடு மட்டுமல்லாமல் அங்கு இருந்து பால் அபிஷேகம் நடைபெறுவதை பார்க்க வேண்டும். முருகப்பெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் அவருக்கு பல அபிஷேகங்கள் நடக்கும். அந்த அபிஷேகங்களில் ஒன்றுதான் பால் அபிஷேகம். பாலபிஷேகம் செய்யும்பொழுது அபிஷேகம் செய்த பாலில் இருந்து சிறிதளவு எடுத்து வீட்டிற்கு வர வேண்டும். இப்படி வீட்டிற்கு வந்ததும் அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதோடு அந்த கடன் பிரச்சினைகள் நீங்குவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும். கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வருமானம் நம்மை வந்து சேரும் வாய்ப்புகள் உண்டாகும். அந்த வாய்ப்புகளை முறையாக நாம் பயன்படுத்திக் கொண்டோம் என்றால் முருகப்பெருமானின் அருளால் விரைவிலேயே கடன் பிரச்சனை தீரும்.
இதையும் படிக்கலாமே: படிப்பில் சிறந்து விளங்க வழிபாடு
மிகவும் எளிமையாக அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த சூட்சுமத்தை ஆடி கிருத்திகை நிறைவடைவதற்குள் வீட்டில் செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.