
இன்பமும், துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்று அனைவரும் அறிந்தது தான். எல்லா சமயங்களிலும் இன்பமுடன் மட்டுமே நாம் இருப்பதில்லை! அதே போல தான் துன்பமே வாழ்க்கை என்று யாரும் வாழ்வதும் இல்லை. மாறி மாறி வரும் இந்த வாழ்க்கையில் சில சமயங்களில் நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் நினைத்தது நடக்க யோசிக்காமல் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.
சில சமயங்களில் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நெருக்கடியான சூழ்நிலை இருக்கும். ஒரு கதவு அடைத்திருந்தால் இன்னொரு கதவை நாடலாம், ஆனால் சுற்றி இருக்கும் அத்தனை கதவுகளும் அடைபட்டு இருந்தால் நாம் என்ன செய்வது? இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு கை கொடுக்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் இறை நம்பிக்கை மட்டுமே ஆகும்.
இந்த இறை நம்பிக்கை எப்பொழுதும் நம்பியவர்களை கைவிட்டது கிடையாது. ஆனால் முழுமையாக நம்ப வேண்டும், அதில் தான் சூட்சமம் இருக்கிறது. முழுமையாக நம்பும் எதுவும் வேறு பலன்களை கொடுப்பதில்லை. நெருக்கடியான இன்னல் நிறைந்த ஒரு சூழ்நிலையில் நீங்கள் மனதார இறைவனை பிரார்த்திக்க நினைத்தால் உடனே அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள்.
எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும், எந்த கிழமையில் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சென்று இந்த பரிகாரத்தை செய்து வரலாம். 108 சிறிய மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 108 நெய் தீபத்திற்கு அளப்பரிய சக்தி உண்டு. கஷ்டம் நிறைந்த சூழ்நிலையில் இறைவனை நம்பி இந்த தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு நினைத்தது நினைத்தபடி உடனே கை கூடி வரும்.
எப்படித்தான் இந்த சூழ்நிலையை கடக்க போகிறோம்? என்று நினைப்பவர்கள் கூட எளிதாக அந்த சூழ்நிலையை கடந்து விடுவதற்கு இந்த ஒரு தீபம் நல்ல ஒரு பலன்களை கொடுக்கவல்லது. 108 நெய் தீபத்தை ஏற்றியவுடன் அங்கேயே அமர்ந்து கந்த சஷ்டி கவசம் மற்றும் கோளறு பதிகத்தை வாசியுங்கள். நவகிரக தோஷங்களால் பீடிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட கோளறு பதிகத்தை நாள் தோறும் தவறாமல் படிக்க வேண்டும். கோளறு பதிகம் நவகிரக தோஷங்களை மட்டும் அல்லாமல் துன்பங்களில் இருந்தும் மீள்வதற்கு உடனே அருள் தரும் ஒரு அற்புதமான பாடல்கள் நிறைந்த பதிகமாக இருக்கிறது.
இதையும் படிக்கலாமே:
ராஜ வாழ்க்கையை தரும் சிவன் வழிபாடு
கந்த சஷ்டி கவசம் மன பயத்தை போக்கி மனோதிடத்தை உண்டாக்கக் கூடியது. காக்க காக்க.. என்று நாம் வாசிக்கும் பொழுதே நம் மனதிற்குள் புது தெம்பு பிறக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். 108 நெய் அகல் விளக்குகளுக்கு முன்பு அமர்ந்து மனமார இந்த ரெண்டு பாடல்களை நீங்கள் பாடி முடிப்பதற்குள் பாதி பிரச்சனைகள் உங்களுக்கு முடிவுக்கு வந்திருக்கும். முழு மனதோடும், முழு நம்பிக்கையோடும் இந்த ஒரு எளிய விஷயத்தை செய்து பாருங்கள் உடனே பலன் கிடைப்பதை நீங்களே உணரலாம்.