நிறைய பேர் மனக்கோட்டை கட்டி கற்பனையிலேயே ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால் நிஜத்தில் சாதாரண மனிதர்களைப் போல கூட நிம்மதியாக வாழ முடியாது. உங்களுக்கு ராஜ வாழ்க்கை வேண்டுமா. உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டுமா. தொடர்ந்து சிவபெருமானை பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்யுங்கள்.
நீங்களும் ராஜாவைப் போல வாழலாம். ராஜா என்றால் கிரீடம் வைத்துக் கொண்டு, அரியணையில் அமர முடியுமா என்று கேட்கக் கூடாது. ராஜாவைப் போல ஒரு சுக போக வாழ்க்கை, இன்றைய சூழ்நிலையில் எப்படி கிடைக்குமோ, அது போல ஒரு நல்ல வாழ்க்கையை அந்த சிவபெருமான் நிச்சயம் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பான்.
ராஜ வாழ்க்கை வாழ சிவன் வழிபாடு
பரணி நட்சத்திரம் மாதம் தோறும் வரும் அல்லவா, அந்த நட்சத்திரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பரணி நட்சத்திரத்தன்று கஸ்தூரி மஞ்சளை தண்ணீரில் கரைத்து சிவபெருமானுக்கு உங்கள் கையால் அபிஷேகம் செய்து வர நல்ல வேலை, நல்ல பதவி உயர்வு, தொழில் நல்ல வருமானம் கிடைத்து, நீங்கள் செல்வ செழிப்பிலும் மன நிறைவிலும் ராஜாவைப் போல வாழலாம்.
கோவிலுக்கு கஸ்தூரி மஞ்சளை உங்கள் கையால் வாங்கி கொடுத்து அதை சிவனுக்கு அபிஷேகம் செய்ய சொன்னாலும் சரிதான். வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு நீங்களே இந்த கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்தாலும் சரிதான், ஆனால் பரணி நட்சத்திரத்தில் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அடமான நகைகளை மீட்க சிவன் வழிபாடு
அதேபோல அடமானம் வைத்த நகையை உங்களால் மீட்க முடியவில்லை என்றால், விசாக நட்சத்திரத்தன்று உங்களுடைய தங்க நகையை போட்ட தண்ணீரைக்(ஸ்வர்ண தண்ணீர்) கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். எப்படி தெரியுமா. 25 பவுன் அடமானம் வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய காதல் சின்ன கம்பல் போட்டு இருக்கீங்க.
அந்த கம்பளை கழட்டி முதலில் நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். பிறகு அந்த தங்கத்தை சுத்தமான தண்ணீரில் போடவும். உங்களுடைய தங்கத்தோடு போட்ட அந்த தண்ணீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, அடமானத்தில் வைத்த நகையை சீக்கிரம் மீட்டெடுக்க வேண்டும் என்று பிராத்தனை வைத்தால், அடமானத்தில் இருக்கும் 20 பவுன் நகையையும் சீக்கிரம் மீட்டு எடுக்கலாம்.
சில சிவன் கோவில்களில் ஸ்வர்ண அபிஷேகம் செய்வார்கள். அதற்காக நீங்கள் உங்களுடைய நகையை இப்படி கொடுக்கும்போது கூட அடமானம் வைத்த நகையை மீட்டெடுக்க முடியும். ஆனால் இதை விசாக நட்சத்திரத்தன்று செய்யும்போது உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
நோய் நொடி தீர சிவன் வழிபாடு
ஹஸ்த நட்சத்திரம் வரும் நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மழை பொழியும் அல்லவா. அந்த மழையின் நீரை நேரடியாக பிடித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை. மழை பொழியும் போது அந்த தண்ணீரை சேகரித்து வைத்துக்கொண்டு, என்றைக்கு ஹஸ்த நட்சத்திரம் வருதோ, அன்று அபிஷேகத்திற்கு, அந்த நீரை பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக முருகன் வழிபாடு
மேல் சொன்ன இந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் அந்த காலத்தில் முன்னோர்கள் பின்பற்றியது. தற்போது மறந்திட்ட ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள். அதை உங்களுக்கு நினைவு கூறியதில் மனநிறைவுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.