- Advertisement -

புதன் கிழமை, அதிசக்தி வாய்ந்த பெருமாள் வழிபாடு

- Advertisement -

மகாலட்சுமிக்கு சொந்தமான இந்த பணம், நிலையாக ஒரு இடத்தில் தாங்காது. அங்கும் இங்கும் ஆக சென்று கொண்டு தான் இருக்கும். உங்களுடைய வீட்டில் பணம் நிலையாக நிலைத்து தங்க வேண்டும் என்றால், மகாலட்சுமியின் அருளாசி உங்களுக்கு நிலையாக கிடைக்க வேண்டும் என்றால், புதன்கிழமை பெருமாளை எப்படி வழிபாடு செய்வது. பெருமாள் நமக்கு ஆசிர்வாதம் வழங்கி நம்மோடு வந்தால், பெருமாள் கூடவே கையைப் பிடித்துக் கொண்டு மகாலட்சுமி வந்துவிடுவார்கள்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அத்தனை பொன்னான புதன்கிழமையில், பெருமாள் வழிபாடு செய்வது அதிசிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை புதன்கிழமை. காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், பெருமாள் கோவிலுக்கு போங்க. போகும்போது நீங்கள் கட்டாயம் வாங்கி செல்ல வேண்டிய ஒரு பொருள் நெல்லிக்காய். கணக்கு உங்களுடைய விருப்பம் தான். மூன்று நெல்லிக்காய் வாங்கிக் கொண்டு போனாலும் தவறு கிடையாது.

- Advertisement -

வெற்றிலை பாக்கு, அதன் மேலே வாழைப்பழம், அதற்கு மேலே நெல்லிக்கனிகளை வைத்து, பெருமாள் பாதத்தில் வைத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். வழக்கம் போல கோவிலில் நெய் விளக்கு ஏற்ற வேண்டும். பெருமாளுக்கு துளசி இலை மாலையை வாங்கி போட வேண்டும்.

அர்ச்சனை செய்த வெற்றிலை பாக்கு பூ பழத்தை எல்லாம் பெருமாளிடம் கொடுத்துவிட்டு, அந்த நெல்லிக்காய்களை மட்டும் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து, மறுபடியும் பெருமாளை வணங்கி விட்டு, அந்த நெல்லிக்காய்களை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும். புதன்கிழமையே அந்த நெல்லிக்காய்களை சாப்பிட வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள், நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் அந்த நெல்லிக்காய்களை தானமாக கொடுக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. புதன்கிழமை பெருமாள் பாதத்தில் வைத்து எடுத்த நெல்லிக்காயை யார் சாப்பிடுகிறீர்களோ அவர்களுடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடி கொள்வாள் என்பது நம்பிக்கை.

வீட்டு பக்கத்தில் எங்கேயாவது நெல்லிக்காய் மரம் இருக்கிறதா, அந்த நெல்லிக்காய் மரத்தை மூன்று முறை சுற்றி வந்து வணங்கிக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடித்து விடும். சின்ன நெல்லிக்காய் மரமாக இருந்தாலும் சரி, பெரிய நெல்லிக்காய் மரமாக இருந்தாலும் சரி, இரண்டு நெல்லிக்காய் மரத்திற்குமே சக்தி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை அஷ்டமி வில்வ இலை பரிகாரம்

அதிசக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை ஒரு புதன்கிழமை மட்டும் செய்துவிட்டு உடனே கோடீஸ்வரராக வேண்டும் என்று கனவு காணக்கூடாது. ஒவ்வொரு நாளும் விடாது முயற்சி மேற்கொள்ள வேண்டும். உழைக்க வேண்டும் ஒவ்வொரு புதன்கிழமையும் பெருமாளை இப்படி வழிபாடு செய்துவர படிப்படியாக உங்களுடைய கஷ்டங்கள் குறைய துவங்கும். தானாக உங்களுடைய வருமானம் பெருக துவங்கும். நிலையாக மகாலட்சுமி உங்கள் வீட்டில் தங்கி விடுவாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -