- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதேய்பிறை அஷ்டமி வில்வ இலை பரிகாரம்

தேய்பிறை அஷ்டமி வில்வ இலை பரிகாரம்

- Advertisement -

இன்று 20.5.2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதி வந்திருக்கிறது. இந்த நாளில் மாலை நேரத்தில் பைரவர் வழிபாடு செய்வது அதி சிறப்பு. உங்களுடைய வாழ்க்கையில் உங்களை பின்தொடரும் வில்லங்கமான பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க இன்று பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

தீராத கடன் சுமை தீர, கோர்ட்டு கேஸ் பிரச்சனைகளுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க, வீடு மனை வாகனம் இது போன்ற சொத்துபத்துகளில் ஏதேனும் வில்லங்கமான பிரச்சனைகள் இருந்தால் அதிலிருந்து விடுபட, கணவன் மனைவி சண்டையிலிருந்து விடுபட, கண் திருஷ்டியில் இருந்து விடுபட, எதிரி தொல்லையில் இருந்து விடுபட, இப்படி பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபட இன்று பைரவரை ஒரு சிறப்பான முறையில் வழிபாடு செய்ய போகின்றோம். அது எப்படி என்பதை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பைரவர் வில்வ இலை பரிகாரம்

பைரவர் கோவிலில் அமர்ந்து ஒவ்வொரு வில்வ இலைகளாக எடுத்து சுருட்டி, மாலையாக கட்டி உங்கள் கையால், பைரவருக்கு சாத்தினால் உங்கள் வாழ்வையில் இருக்கும் அத்தனை விலங்கமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இந்த பரிகாரத்தை இன்னும் சிறப்பாக போகின்றோம். எப்படி தெரியுமா? 9 வில்வ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் பைரவரது இந்த மந்திர வார்த்தையை எழுதி, சுருட்டி வெறும் வில்வ இலைகளோடு சேர்த்து, இந்த இலையையும் வைத்து, கட்டி பைரவருக்கு மாலை போட வேண்டும். மொத்த இலையிலும் இந்த மந்திரத்தை எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒன்பது இலைகளில் இந்த மந்திரத்தை எழுதுங்கள். மற்ற இலைகளை வெறுமனே சுருட்டி மாலையாக கட்டிக் கொள்ளலாம். அந்த வில்வ இலையில் எழுத வேண்டிய சக்தி வாய்ந்த பைரவரின் மஹா மந்திரம் இதோ.

- Advertisement -

பைரவர் மஹாமந்திரம்

ஓம் மஹா கால பைரவா ஓம் !

இவ்வளவு தாங்க. சின்ன மந்திரமாக இருந்தாலும் இந்த மந்திரத்திற்கும் மகா சக்திகள் அடக்கம். இந்த மந்திரத்தை வில்வ இலையில் எழுதும்போது இதற்கு ஆயிரம் மடங்கு சக்தி அதிகரிக்கும். உங்கள் கையால் கட்டிய இந்த மாலையை கொண்டு போய் பைரவருக்கு போட்டுவிட்டு, என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைத்துவிடும். உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த கால பைரவரே உறுதுணையாக நிற்பார்.

- Advertisement -

இன்னும் சொல்லப்போனால் உங்கள் உடம்புக்குள் புகுந்து கால பைரவர் வேலை செய்ய துவங்கி விடுவார். அவ்வளவு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. இன்று மாலை 3:00 மணியிலிருந்து 4:30 மணி வரை ராகுகால நேரம் முடிந்தால், இந்த நேரத்தில் பைரவருக்கு மாலை கட்டி போடுங்கள். முடியவில்லை என்றால் மாலை 6 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த மாலையைக் கட்டி பைரவருக்கு சாத்தலாம்.

இதையும் படிக்கலாமே: 20-5-2025 இன்ற தேய்பிறை அஷ்டமி திதி

இது ஒரு அதிசக்தி வாய்ந்த பரிகாரம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இதை இந்த தேய்பிறை அஷ்டமி திதியில் செய்து பாருங்கள். அடுத்த தேய்பிறை அஷ்டமி திதிக்கு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை அந்த பைரவர் கோவிலில் அமர்ந்து நினைத்து பார்த்து, பைரவருக்கு நன்றி சொல்வீர்கள்.

சற்று முன்