- Advertisement -

கண் திருஷ்டி விலக அமாவாசை திதியில் செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

இந்த கலியுகத்தில் கெட்ட சக்தியின் ஆதிக்கமும், கண் திருஷ்டியின் ஆதிக்கமும் தலைவிரித்து ஆடுகிறது. யார் வீட்டில் பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை. பிரச்சனை இல்லாத நிம்மதியான வீடு இல்லை என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. உங்களுடைய வீட்டிலும் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறதா, கண் திருஷ்டியால் பிரச்சனையா.

கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்ய சக்திகளின் ஆதிக்கத்தால் பிரச்சனையா. கண்ணை மூடிக்கொண்டு இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் துர்சக்திகள் அனைத்தும் ஒரே இரவில் வெளியே ஓடிவிடும்.

- Advertisement -

கெட்ட சக்தி விலக அமாவாசை பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் ஒரே ஒரு எலுமிச்சம்பழம். கரும்புள்ளிகள் இல்லாத மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழுத்த எலுமிச்சம் பழம். அதை வாங்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். 2 துண்டுகள் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும். ஒரு பாதி எலுமிச்சம் பழத்தில், ஒரு ஓரமாக 3 கல்லுப்பை சொருகி வையுங்கள், அந்த கல்லுப்புக்கு எதிர்ப்பக்கம் 3 மிளகை இதேபோல சொருகி வைத்து விடவும்.

எலுமிச்சம் பழத்திற்கு உள்ளே இந்த இரண்டு பொருட்களும் புதைந்து விட்டால் பரவாயில்லை. ஒரு பாதி எலுமிச்சம் பழத்தில், எதிரெதிர் பக்கம் மூன்று கல் உப்பு, மூன்று மிளகு வைத்தால் வட்டமாக தெரியும் அல்லவா. இதன் மேலே அப்படியே குங்குமத்தை தடவ வேண்டும். ஒரு பாதி எலுமிச்சம்பழம் தயார்.

- Advertisement -

இன்னொரு பாதி எலுமிச்சம் பழத்தையும் எடுத்து இதே போல தயார் செய்து கொண்டு, இதை நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும் வைத்து விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். (புரிந்ததல்லவா, ஒரு பாதி எலுமிச்சம் பழத்தில், ஒரு ஓரமாக மூன்று கல் உப்பு, மறு ஓரமாக மூன்று மிளகு. இதே போல இன்னொரு பாதி எலுமிச்சம் பழத்தை தயார் செய்ய வேண்டும்.) அமாவாசை நாளன்று அதிகாலை வேளையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பு இந்த எலுமிச்சம் பழத்தை தயார் செய்து நிலை வாசலில் வைத்து விடுங்கள்.

இந்த எலுமிச்சம்பழத்தை நிலை வாசலில் வைப்பதற்கு முன்பு, நிலை வாசலை கூட்டி கோலம் போட்டு விடவும். இந்த எலுமிச்சம் பழம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அப்படியே இருக்கும். மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருவேளை எலுமிச்சம்பழம் வைத்த முதல் நாளிலேயே அழுகிவிட்டால், அதை எடுத்து முதலில் தூரமாக குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் இருக்கும் துர்சக்திகளின் அதிகத்தை அந்த எலுமிச்சம் பழம் தன்னகத்தை ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம். அழுகவில்லை எலுமிச்சம்பழம் நன்றாக தான் இருக்கிறது என்றால் அது அப்படியே இருக்கலாம். எலுமிச்சம் பழம் நாளுக்கு நாள் கொஞ்சம் காய்ந்து போகும் அதனால் தவறு கிடையாது.

மொத்தமாக எலுமிச்சம் பழம் காய்ந்த பிறகு அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை அமாவாசையில் செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியை நீக்கும். வீட்டிற்குள் வருபவர்களுடைய நெகட்டிவ் எனர்ஜியை இது ஈர்த்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை நீங்க முருகர் மந்திரம்

நாளைய தினம் அமாவாசை திதி வரவிருக்கின்றது. இந்த வைகாசி மாத அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய குடும்பத்தில் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -