வேலை செய்யும் இடத்தில் எதிரி, தொழிலில் எதிரி, நம் வீட்டு அக்கம் பக்கத்தில் எதிரி, சொந்த பந்தங்களே கூட எதிரியாக இருக்கிறார்கள். வாழ்க்கையில் எதிரிகளை எதிர்கொண்டு தான் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது. எதிரிகளை வென்று, எதிரிகள் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் செய்ய வேண்டிய முருகர் வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
முருகருக்கு உரிய நட்சத்திரமானது கார்த்திகை நட்சத்திரம். கிருத்திகை என்று சொல்லுவோம் அல்லவா. இந்த கிருத்திகை நாளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம், முடியாதவர்கள் வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்தாலும் எதிரி தொல்லை படிப்படியாக குறைய தொடங்கும். அந்த வழிபாடு என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
எதிரி தொல்லை நீங்க முருகர் வழிபாடு
இன்று 5-6-2024 புதன்கிழமை அன்றும் கிருத்திகை திதி இருக்கிறது. இன்று இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. 2 செவ்வாழைப் பழங்களை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு இந்த பழம் ரொம்ப ரொம்ப முக்கியம். உங்கள் வீட்டிலேயே முருகனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக இந்த வாழைப்பழத்தை வைத்துவிட்டு, ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ‘ஓம் ஷத்ரு சம்ஹார சுப்ரமணிய சுவாமியே நமோ நமஹ!’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
இந்த இரண்டு செவ்வாழையில் ஒரு வாழை பழத்தை நீங்கள் சாப்பிட்டு விடுங்கள். இன்னொரு வாழைப்பழத்தை தானமாக கொடுக்கலாம். ஒரு கணக்குக்காகத்தான் இரண்டு செவ்வாழை என்று சொல்லியுள்ளோம். நீங்கள் 10 செவ்வாழை வாங்கி வைத்து அதிலிருந்து 1 செவ்வாழையை நீங்கள் சாப்பிட்டு, மீதி இருக்கும் பழங்களை தானமாக கொடுத்தாலும் நன்மையை நடக்கும்.
சத்ருக்களை சம்காரம் செய்யக்கூடிய வேலவனின் நாமத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபாடு செய்யும்போது உங்களுடைய எதிரிகள் எல்லாம் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். இதனால் எதிரிகளுக்கும் எந்த பிரச்சனையும் வராது. உங்களுடைய வாழ்க்கையிலும் எந்த தொல்லையும் இருக்காது. தீராத எதிரிகளின் மூலம் துன்பத்தை எதிர்கொண்டு வருபவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு நிச்சயம் கை கொடுக்கும்.
செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொண்டால் 6 செவ்வாய் கிழமை தொடர்ந்த இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வீட்டில் இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் கோவிலுக்கு இந்த வாழைப்பழத்தை எடுத்துச் சென்று, முருகனின் பாதத்தில் வைத்து கோவிலிலேயே இந்த மந்திரத்தை சொல்லி, அந்த வாழைப்பழத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே: யோகம் தரும் மந்திரம்
அது உங்களுடைய விருப்பம் தான். கிருத்திகை அன்று இந்த வழிபாட்டை செய்தாலும் ஆறு கிருத்திகை நாளில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. இந்த கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானின் இந்த வழிபாட்டை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷத்துடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.