- Advertisement -

நடக்காததையும் நடத்திக் காட்டும் முருகனின் திருநாமம்

- Advertisement -

இன்று செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம். இன்றைய நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்றே கூறலாம். அந்த வகையில் மிகவும் எளிமையான முறையில் முருகனின் திருநாமத்தை மட்டும் 21 முறை எழுதுவதன் மூலம் நடக்கவே நடக்காது என்று நினைத்திருந்த காரியமும் எளிதில் நடந்திட முருகப்பெருமான் அருள் புரிவார். அப்படிப்பட்ட திருநாமத்தை எப்படி எழுதுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்பதற்காக முயற்சிகள் செய்வோம். பலமுறை முயற்சி செய்தும் அந்த காரியத்தில் ஏதாவது தடைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த காரியம் நம்முடைய வாழ்க்கையில் நடந்து விட்டால் நம்முடைய வாழ்க்கையே மாறிவிடும் என்ற அளவிற்கு இருக்கும். இப்படி சிறப்பு வாய்ந்த அந்த காரியம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது நடந்து விடாத அதன் மூலம் நம்முடைய வாழ்க்கை நல்லவிதமாக மாறிவிடாதா என்று பலரும் ஏங்கி தவிப்பார்கள். அப்படிப்பட்ட காரியம் நடந்திட முருகப்பெருமானின் திருநாமம் நமக்கு அருள் புரியும். அந்த திருநாமத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக இருக்கக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. அதனால் இன்றைய நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களை மாலையாக வாங்கி கொடுத்து ஒன்று அல்லது ஆறு என்ற எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வைத்து முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் தங்களுடைய வீட்டிலேயே முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து ஒரு தாம்பாளத்தில் வெற்றிலையை பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிறத்திரி போட்டு தீபமேற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம். அதே சமயம் முருகப்பெருமானுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பொருளை நெய்வேதியம் ஆகவும் வைப்பது என்பது மிகவும் சிறப்பு. இதோடு சேர்த்து முருகப்பெருமானுக்குரிய கவச பாடல்களை பாராயணம் செய்வது, மந்திரங்களை கூறுவது போன்ற வழிபாட்டையும் நாம் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டோடு சேர்த்து முருகப் பெருமானின் ஒரு திருநாமத்தை நாம் 21 முறை எழுதினால் போதும். நம் வாழ்வில் நடக்காது என்ற நினைத்த காரியமும் நடக்கும். அதுதான் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”. இந்த திருநாமத்தை நம்முடைய இடது கையால் 21 முறை எழுத வேண்டும். பொதுவாக எந்த ஒரு நாமத்தை நாம் கூறுவதாக இருந்தாலும் கூறுவதை விட எழுதுவது என்பது இரட்டிப்பு பலனை தரும். அதிலும் நம்முடைய இடது கையால் நாம் எழுதும் பொழுது நம்முடைய மனமும் புத்தியும் அனைத்தும் அந்த திருநாமத்தின் மீதே இருக்கும் என்பதால் முருகப்பெருமானின் அருளை நம்மால் எளிதில் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:அக்ஷய திருதியை மந்திரங்கள்

எளிமையான இந்த திருநாமத்தை முருகனை மனதார நினைத்துக் கொண்டு யார் ஒருவர் இன்று இரவுக்குள் 21 முறை எழுதுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -