- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅக்ஷய திருதியை மந்திரங்கள்

அக்ஷய திருதியை மந்திரங்கள்

- Advertisement -

2025 வரக்கூடிய புதன்கிழமையில் அக்ஷய திருதியை பெரும் யோகங்களுடன் கூடி வருகிறது. இந்த நாளில் வழிபட வேண்டிய முக்கியமான தெய்வங்கள் மற்றும் அவர்களுடைய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களையும், யாரெல்லாம், எந்த மந்திரத்தை? எப்படி உச்சரிக்க, என்ன பலன் கிடைக்கும்? எனும் ரகசியத்தையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் பகிர்கிறோம், அறிந்து கொள்ளுங்கள்.

அக்ஷய திருதியை நாள் தங்கம் வாங்குவதற்கு மட்டும் ஏற்ற நாள் கிடையாது. பொதுவாகவே இந்த நாளில் தங்கம் வாங்கினால் போதும் என்ற மனநிலை தான் நம் மக்களுக்கு இருக்கிறது. அக்ஷய திருதியை நாள் ரொம்பவும் விசேஷமானது. அக்ஷயம் என்றால் குறையாதது, தேயாதது, வளரக்கூடியது என்பது பொருளாகும். சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய திருதியை திதியை “அட்சய திருதியை” என்கிறோம்.

- Advertisement -

இந்த நாள் நான்கு முக்கிய தெய்வங்களுக்கு ஸ்பெஷல் பூஜைகள் செய்து கவனித்தால், வாழ்க்கையில் எல்லாவிதமான சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், இந்த நாளில் விஷ்ணு பகவானை பூஜித்து துலாபாரம் செய்து காணிக்கை செலுத்தினால், விரைவில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். எடைக்கு எடை உங்களால் எந்த பொருள் முடியுமோ, அந்த பொருளை துலா தானம் செய்யுங்கள்.

அடுத்து மகாலட்சுமியை அனைவரும் திருதியை நாளில் வழிபட மறக்கக்கூடாது. விஷ்ணு ஸ்வரூபினியாக இந்த நாளில் அன்னை மகாலட்சுமி அருள் புரிகிறாள். எனவே மகாலட்சுமிக்கு ஸ்ரீ சுக்த மந்திரத்தை உச்சரித்து, வெண்தாமரை மலர் வைத்து ஐஸ்வர்யங்கள் பெருக பிரார்த்தனை செய்யுங்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய, செல்வ வளம் பெருகுவதற்கு, தொழிலில் சிறந்து விளங்குவதற்கு குபேரனை வைத்து திருதியை நாளில் குபேர விளக்கு ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து கொள்ளலாம். முழு முதல் கடவுள் ஆன விநாயகரை வழிபட்ட பின்பு மற்ற தெய்வங்களை இது போல் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பசித்தோருக்கு அன்னம் அளிக்கக் கூடியவள் அன்னபூரணி. அன்னபூரணியை கட்டாயம் திருதியை நாளில் வழிபடுபவர்களுக்கு வறுமை நீங்கி பசி இல்லாத நல்ல நிலை உண்டாகும். மேலும் பசித்தோர்க்கு இன்றைய நாளில் கண்டிப்பாக அன்னதானம் செய்யுங்கள். இது உங்களை மேலும் சிறப்புடையவராக மாற்றும். திருதியை திதியில் கோவிலுக்கு சென்று பூஜை மற்றும் விசேஷங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

அக்ஷய திருதியை நாளில் சொல்ல உகந்த முக்கிய மந்திரங்கள் :
1. விஷ்ணு மந்திரம்:
“ஓம் நமோ நாராயணாய” 108 முறை
(அக்ஷய திருதியை நாள் ஸ்ரீமன் நாராயணரின் அருளை பெற முக்கியமானது.)

- Advertisement -

2. லட்சுமி தேவியின் மந்திரம்:
ஓம் மஹாலக்ஷ்மியை நமஹ!
மஹாலக்ஷ்மியே நமஹ!
விஷ்ணு ஸ்வரூபிணி நமஹ!
சர்வ சம்ப்ராப்தி தாரினி!
அஷ்ட ஐஸ்வர்ய புஷ்டி தாரினி!
சர்வ ஜன பரிபாலினி!
சர்வ கர்ம பரிபாலினி!
சர்வ ஐஸ்வர்யா காரினி!
சர்வ சங்கரி பரம ஸ்வாமி!
ஸர்வ ஸ்வாமி த்ராணி!
சர்வ சம்ப்ராப்தி தாரினி!
சர்வ சக்திய நமஹ!!!

3. குபேர மந்திரம்:
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ குபேராய நமஹ”
(பணவளம் மற்றும் செல்வத்திற்காக)

4. அன்னபூரணி அம்மன் மந்திரம்:
“ஓம் அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கரப்பிரியவல்லபே
ஜ்ஞான வைராக்க்ய சித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி சுபானனே”
(உணவுப் பசியின்றி செல்வ வாழ்க்கைக்காக)

5. ஸ்ரீ ஸூக்தம் பாகம்:
“ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணரஜதஸ்ரஜாம்।
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ”

இதையும் படிக்கலாமே:
அட்சய திருதியை 12 ராசிகள் செய்ய வேண்டிய தானம்

வணிகர்களும், தொழிலாளர்களும் அக்ஷய திருதியையில் சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீம் க்லீம் லக்ஷ்மீ நமஹ” என்ற பீஜ மந்திரத்தை ஜபிக்கலாம். மந்திரங்களை 11 அல்லது 108 முறை ஜபிக்கலாம். விரதம், தானம், அன்னதானம் செய்யும் போது இந்த மந்திரங்களை மனதில் சிந்தித்தல் சிறந்தது.

சற்று முன்