
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் அவருக்கு உகந்த திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி என்றும் நம் அனைவருக்கும் தெரியும். தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீரும். அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று எந்த இலையின் மீது தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய விநாயகப் பெருமானின் அருளால் நினைத்தது நடக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
எந்த ஒரு தெய்வ வழிபாடும் முழுமை பெற வேண்டும் என்றால் அதற்கு தீபம் மிகவும் உறுதுணையாக இருக்கும். தெய்வத்தின் படங்களை வைத்து பூஜை செய்ய இயலவில்லை என்றாலும் அந்த இடத்தில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் அந்த தீபத்தின் பலனால் நம்முடைய வழிபாட்டின் பலனை நம்மால் பெற முடியும். அந்த அளவிற்கு தீபம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே திகழ்கிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான முறையில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை பெற முடியும். அந்த வகையில் விநாயகப் பெருமானின் அருளை பெறுவதற்கு ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இந்த தீபத்தை ஒவ்வொரு மாதமும் நாம் ஏற்றலாம். அதிலும் குறிப்பாக விநாயகர் பெருமானுக்கு உகந்த திதியான சதுர்த்தி திதி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பு. இது வளர்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் ஏற்றலாம், தேய்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் ஏற்றலாம். இதோடு விநாயகப் பெருமானுக்கு உகந்த கிழமையான திங்கட்கிழமை தோறும் இந்த தீபத்தை ஏற்றினாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஒரே ஒரு இலை வேண்டும். அந்த இலை தான் எருக்கு இலை. எருக்கு இலையை பறித்து அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து விநாயகப் பெருமாளுக்கு முன்பாக அந்த இலையை வைத்து அந்த இலைக்கு மேல் ஒரு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபமானது விநாயகப் பெருமானை பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்படி நாம் தீபம் ஏற்றி வைத்துவிட்டு விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையோ அல்லது விநாயகர் அகவலையோ பாராயணம் செய்து நம்முடைய வேண்டுதலை முன் வைத்தோம் என்றால் விநாயகப் பெருமானின் அருளால் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும். இந்த தீபத்தை நாம் வீட்டிலும் ஏற்றலாம் விநாயகப் பெருமானின் ஆலயத்திலும் ஏற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: நினைத்ததை நடத்திக் கொடுக்கும் தீபம்
எந்த ஒரு வழிப்பாட்டை செய்வதாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் தீபம் ஏற்றி தான் வழிபாடு செய்வோம். அந்த வகையில் விநாயகப் பெருமானுக்கு உகந்த இந்த ஒரு தீபத்தை முழுமனதோடு சங்கடஹர சதுர்த்தி நாளன்று ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது அத்தனையும் நடந்தேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.