
இன்றைய சூழ்நிலையில் வரக்கூடிய வருமானத்தை எதற்கு செலவு செய்கிறோமோ இல்லையோ மருத்துவ மனைக்கு கொட்டி கொடுக்கின்றோம். மருந்து மாத்திரை சாப்பிடாத நாளே இல்லை. டாக்டரிடம் செல்லாத நாளே இல்லை. அவ்வளவு நோய் நொடி பிரச்சனை இருக்கிறது. இப்படி உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவு தொடர்ந்து உடல்நிலை பிரச்சினை இருக்கிறதா? ஆரோக்கியமே இல்லை என்றால் இந்த ஒரு விளக்கை மட்டும் ஏற்றிப் பாருங்கள். அனுமனுக்கு முன்பாக எந்த தீபத்தை ஏற்றி எப்படி வழிபட்டால் நோய்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீராத பல வகையான கஷ்டங்களுக்கு தீர்வு தரக்கூடிய சக்தி ஆஞ்சநேயருக்கு உண்டு. ஹனுமன் கோவிலில் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். ஹனுமன் போல நாமும் பலசாலியாக மாறலாம். ஹனுமன் இருக்கக்கூடிய கோவிலாக பார்த்து ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை தொடங்க வேண்டும். அதிலும் மூலவர் ஆஞ்சநேயராக இருந்தால் இன்னும் அதிக பலன் தரும் இந்த பரிகாரம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு கடுகு எண்ணெய் பஞ்சுதிரி கற்கண்டு வெற்றிலை கட்டாயம் தேவை.
அனுமன் கோவிலுக்கு சென்று ஒரு வெற்றிலையை வைத்து அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த வெற்றிலையில் நெய்வேத்தியமாக இரண்டு கற்கண்டை வைக்க வேண்டும். ஆஞ்சநேயர் சன்னதி முன்பாக அமர்ந்து உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருப்பவருக்கு இருக்கக்கூடிய அந்த தீராத வியாதி தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த விளக்கை ஏற்றலாம். ஆனால் முதல் நாள் எந்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றினீர்களோ அதே நேரத்தில் 48 நாட்களும் தொடர்ந்து இந்த விளக்கை ஏற்ற வேண்டும். முதல் நாள் காலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்றிவிட்டால் 48 நாட்களும் காலையில் தான் விளக்கேற்ற வேண்டும். மாலையில் இந்த பரிகாரத்தை நீங்கள் தொடங்கினால் 48 நாட்களும் மாலையில் தான் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
கற்கண்டுக்கு பதில் சர்க்கரை, வெல்லம் என்று எது வேண்டுமானாலும் நெய்வேத்தியமாக வைக்கலாம். இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஆரோக்கிய பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கி விடும். நோய்வாய் பட்டவர்கள் கையால்தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களால் முடியவில்லை என்றால் அவருக்கு பதில் அவர்களின் ரத்த சொந்தம் கொண்ட உறவினர்கள் இந்த விளக்கேற்றலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.
கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன் என்று இந்த விளக்கை ஏற்றலாம். நம்பிக்கையோடு 48 நாள் விளக்கு ஏற்றியும் வீட்டில் தொடர்ந்து மருத்துவ செலவு ஆகிறது என்றால் மீண்டும் தொடர்ந்து இந்த கடுகு எண்ணெயில் ஹனுமனுக்கு விளக்கு போடலாம். தவறு கிடையாது. விடாமல் ஹனுமனின் பாதங்களில் நம்பிக்கையோடு பற்றி கொள்ளுங்கள். படிப்படியாக உங்கள் குடும்பத்தில் மருத்துவ செலவு குறையும். ஆரோக்கியம் பெருகும்.
இதையும் படிக்கலாமே நாகசதுர்த்தி அன்று கூற வேண்டிய மந்திரம்
முழு நம்பிக்கையுடன் அனுமனின் பாதங்களில் சரணாகதி அடைந்து இந்த தீபத்தை ஏற்றி வழிபட நோய் நொடிகள் முற்றிலும் நீங்கும். முழு நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.