சதுர்த்தி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் விநாயகப் பெருமானே. ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தியை நாம் நாகசதுர்த்தி என்று கூறுகிறோம். விநாயகப் பெருமானுக்கு அருகில் கண்டிப்பான முறையில் நாகங்கள் இருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் விநாயகர் தன்னுடைய இடுப்பில் நாகத்தை கட்டியிருப்பார். அதனால் நாம் சதுர்த்தி தினத்தன்று விநாயகரை வழிபட்டாலே நாகங்களையும் வழிபடுவதற்குரிய பலனை நம்மால் பெற முடியும்.
அதே சமயம் இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய நாகசதுர்த்தி அன்று நாகங்களை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நாகத்தால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாகசதுர்த்தி என்று கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நாக சதுர்த்தி வழிபாடு என்பது பலரும் பின்பற்றக்கூடிய வழிப்பாடாக திகழ்கிறது. நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களாலும், ராகு கேதுவால் ஏற்பட்ட தோஷங்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் நாக சதுர்த்தி அன்று நாகத்தை வழிபாடு செய்வதன் மூலம் அந்த தோஷத்தில் இருந்து விடுபட முடியும். இந்த வழிபாட்டை வீட்டிலும், கோவிலிலும் நாம் நாகத்திற்கு பாலால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் புற்றுக்கு பாலூட்டுவதன் மூலமும் நாக தோஷம் என்பது நீங்கும்.
இந்த நாகசதுர்த்தி தினத்தன்று நாம் ராகு காலத்தில் நாக வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாகசதுர்த்தி அன்று நாகராஜருக்குரிய மந்திரத்தை நாம் 27 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதன் மூலம் கால சர்ப்பதோஷம் நீங்கும், நாக தோஷம், நாகசாபம் போன்றவை நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும், திருமணம் கைகூடி வரும், தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும், பிரிந்து வாழும் தம்பதிகளும் ஒன்றாக சேருவார்கள், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நாகராஜரின் மூல மந்திரம்
ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே
நாகமணி சேகராய தீமஹி
தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்
பொருள்
சர்ப்பங்களின் மன்னனே பேரொளியை கொண்ட நாகமணியை வைத்திருப்பவனே நாக தேவனே எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள் வாயாக.
இந்த மந்திரத்தை கூறிவிட்டு முழுமனதோடு நாகராஜரை நினைத்து எங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளையும் நீக்கி அருள வேண்டும் என்று மனதார வேண்ட வேண்டும். இப்படி வேண்டி நாளைய தினம் நாம் நாக சதுர்த்தி அன்று வழிபாடு செய்வதன் மூலம் ராகு கேதுவால் ஏற்பட்ட கெடுபலன்களும் மாறும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளுக்கு காரணமாக திகழ்பவர்கள் ராகு கேது என்பதால் அவர்களின் கெடுபலன்கள் மாறும்பொழுது நம்முடைய தடைகள் நீங்கி நமக்கு வெற்றிகள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை நாளை நாகச் சதுர்த்தி அன்று கூறி மனதார வழிபாடு செய்பவர்களுக்கு நாகத்தால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்குவதோடு நன்மைகள் பல ஏற்படும்.