- Advertisement -
- Advertisement -

நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் நவகிரகங்களின் ஒரு கிரகமாக திகழக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவான் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் பணம் ரீதியான பிரச்சனைகள் தீரும், சொகுசான வாழ்க்கை கிடைக்கும் என்பதுதான். ஆனால் அதையும் தாண்டி பல பாதிப்புகளை தரக்கூடியவராக தான் சுக்கிர பகவான் திகழ்கிறார், ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் நீச்சம் அடைந்திருந்தால் அதனால் அவர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் அவர் நல்ல நிலையில் இருந்தார் என்றால் நல்லவை நடக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கும் பொழுது எந்த முறையில் வழிபாடு செய்தால் அவரின் தாக்கம் குறையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய உடலில் நவகிரகங்களுக்கு என்று ஒவ்வொரு உறுப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் சுக்கிர பகவானுக்குரிய உறுப்பாக திகழ்வது பிறப்புறுப்பு. பிறப்புறுப்பில் ஏதாவது பாதிப்புகள் இருக்கிறது என்னும் பட்சத்தில் அவர்களுக்கு ஜாதகத்தில் சுக்கிர ரீதியான பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். சுக்கிரனின் பாதிப்பு இருந்தால்தான் குழந்தை பாக்கியம் தடைப்படும் அல்லது தாமதப்படும். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுடைய இனப்பெருக்க உறுப்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால் கண்டிப்பான முறையில் சுக்கிர பகவானுக்குரிய பரிகாரத்தை செய்து அதே சமயம் மருத்துவ ரீதியான சிகிச்சையில் ஈடுபட்டால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக சுக்கிர பகவான் ஒழுக்கத்திற்கு காரண கர்த்தாவாக திகழ்கிறார் இன்றைய காலத்தில் பல பிள்ளைகள் ஒழுக்கமற்ற நிலையில் இருக்கிறார்கள். இதற்கு முன்பாக இருந்த தலைமுறையினர் இந்த அளவிற்கு ஒழுக்க சீர்கேடு என்பது இல்லாமல் இருந்தார்கள். இதற்கு நாகரீகம் வளர்ந்து விட்டது என்று கூறினாலும் அறிவியல் ரீதியாக சுக்கிர கிரகமானது நம்முடைய பூமிக்கு அருகில் வந்து விட்டது, சுக்கிர கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளி என்பது குறுகிவிட்டது என்று கூறுகிறார்கள்.

அந்த தாக்கத்தின் காரணமாக தான் இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய பிள்ளைகள் ஒழுக்க சீர்கேட்டில் இருக்கிறார்கள். ஒழுக்கத்தை ஒரு குழந்தை பெற வேண்டும் என்றால் ஒழுக்கமான நல்ல குழந்தையாக அந்த குழந்தை வளர வேண்டும் என்றால் சுக்கிர பகவானின் அருள் என்பது வேண்டும். சரி இப்பொழுது சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய வழிப்பாட்டு முறையை பற்றி பார்ப்போம்,

- Advertisement -

சுக்கிர பகவானின் அருளைப் பெற வேண்டும் என்றால் வெள்ளீஸ்வரர் சமேத காமாட்சியம்மனை வழிபாடு செய்ய வேண்டும். காமாட்சி அம்மன் என்பவர் நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அம்மன். வெள்ளீஸ்வரர் என்பவர் சுக்கிர பகவானின் சாபத்தை நீங்கியவர். அதனால் இவர்கள் இருவரையும் நாம் வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு செய்தோம் என்றால் சுக்கிர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் என்பது நீங்கும்.

மேலும் வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளோ அல்லது இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள்ளோ நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து மொச்சையை வைத்து வழிபாடு செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதன் மூலம் சுக்கிர யோகம் ஏற்படும்.

- Advertisement -

கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சுக்கிர ஹோரையில் ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து மொச்சையை வைத்து வழிபாடு செய்து விட்டு அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு அதிலும் குறிப்பாக வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு தானமாக தரும் பொழுதும் நமக்கு சுக்கிரனால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி சுக்கிர யோகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே கர்ம வினைகளும் கடன்களும் தீர பரிகாரம்

சுக்கிரனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்கி அவரின் அருளால் யோகத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முழு மனதுடன் இந்த வழிபாட்டையும் பரிகாரத்தையும் செய்தால் நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -