- Advertisement -
- Advertisement -

பணத்தை வைத்து என்ன செய்வது என்று பணக்காரனும், பணத்துக்கு என்ன செய்வது என்று ஏழையும் அனுதினமும் சிந்திப்பது தான் இன்றைய நடைமுறை வாழ்க்கையாக மாறிவிட்டது. பண கஷ்டம் எப்போது எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. முன்கூட்டியே சேமிப்பது தான் புத்திசாலித்தனம். அன்றாட செலவுக்கு சரியாகப் போகிறது இதில் எங்கு சேமிப்பது என்று திண்டாடுபவர்களும் உண்டு. எதிர்பாராத நேரத்தில் வரக்கூடிய இந்த பண செலவுகளை சமாளிக்க, குபேர வழிபாடு நல்ல பலன் தரும். பணக்கஷ்டம் தீர குபேர வழிபாடு செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பணக்கஷ்டம் தீருவதற்கு முதலில் குபேர விளக்கு ஒன்றை வாங்கி வையுங்கள். குபேர விளக்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் எல்லா கடைகளிலும் கிடைக்கப்படுகிறது. குபேரனுக்கு உகந்த இந்த விளக்கு வீட்டில் வியாழன் கிழமை தோறும் நின்று எரிவதால் பண ரீதியான பிரச்சினைகளும், சொத்து தகராறுகளும், வழக்கு நிலுவைகளும் தீரும் என்பது நம்பிக்கை. தீராத வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கும் குபேர விளக்கை ஏற்றலாம்.

- Advertisement -

பணக்கஷ்டம் தீர அதற்கு குபேர எந்திரம் இருந்தால் பயன்படுத்துங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு பேப்பரில் குபேர எந்திர எண்களை கட்டம் போட்டு வரைந்து வைத்துக் கொள்ளுங்கள். படத்தில் காட்டியுள்ள படி எண்களை வரிசையாக கட்டம் போட்டு எழுதுங்கள். இந்த எந்திரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, குபேர விளக்கை ஏற்ற வேண்டும். வியாழன் கிழமையில் மாலை 5:30 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.

குபேர விளக்கை நன்கு சுத்தம் செய்து கழுவி காய வைத்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். குபேர விளக்கில் பச்சை திரி போட்டு ஏற்றுவதால் பண கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். பச்சை நிறம் குபேரனுக்கு உகந்தது ஆகும் எனவே பச்சை நிற திரியை போட்டு மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு எண்ணிக்கையில் மஞ்சள், குங்கும பொட்டு வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

குபேர விளக்கு ஏற்றும் பொழுது திரியானது நன்கு நின்று எரிய வேண்டும். விளக்கு திரியை நன்கு முறுக்கி விடுங்கள். குபேர விளக்கிற்கு போடப்படும் திரியானது இரட்டை திரியாக இல்லாமல் ஒற்றை திரியாக இருப்பது நல்லது. தீப ஜோதி அங்கும் இங்கும் அலையாமல் இருக்க திரியின் முனைப்பகுதியில் கொஞ்சம் கற்பூரத்தை அழுத்தி வைத்து தீபம் ஏற்றுங்கள். குபேர படம், குபேர விக்ரஹம் இருந்தால் ரொம்பவும் நல்லது. ஒரு கண்ணாடி குவளையில் ஐந்து ரூபாய் நாணயங்கள் 51 அல்லது 108 எண்ணிக்கையில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பிள்ளைகள் நன்றாக படிக்க விநாயக மந்திரம்

குபேரன் நாணய அர்ச்சனையை விரும்புபவர். வியாழன் கிழமையில் நாணயங்களால் அவரை அர்ச்சித்து, “ஓம் குபேராய நமஹ” என்னும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் தீராத பண கஷ்டமும் தீர்ந்துவிடும். ஒவ்வொரு வியாழன் கிழமை தோறும் இது போல தீபம் ஏற்றி, நாணய அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். சக்தி வாய்ந்த இந்த எளிய வழிபாடு நிச்சயம் பணக்கஷ்டத்தை தீர்க்கும். உழைத்தால் தான் பண கஷ்டம் தீரும் என்பதெல்லாம் வாஸ்தவம் தான், ஆனால் தெய்வ அருள் இருந்தால் தான் அந்த உழைப்பிற்கே உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை மறவாதீர்கள். தெய்வ அருளோடு உழைத்துப் பாருங்கள், உங்களுடைய உழைப்புக்கு உரிய பலன்களும் கிடைக்கப்பெறும்.

- Advertisement -