- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிள்ளைகள் நன்றாக படிக்க விநாயக மந்திரம்

பிள்ளைகள் நன்றாக படிக்க விநாயக மந்திரம்

- Advertisement -

நாளைய தினம் மார்கழி மாதத்தில் வரவிருக்கும் சங்கடஹர சதுர்த்தி. புதன்கிழமையில் இந்த சங்கடஹர சதுர்த்தி வந்திருப்பது கூடுதல் சிறப்பு. புத்தி காரகன் புதன். படிக்கும் பிள்ளைகளுக்கு ஒரு அற்புதம் வாய்ந்த பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

எப்போதும் கொஞ்சம் மந்த தன்மையோடு, சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் பிள்ளைகள், கல்வியிலும் அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்பட வேண்டும், சுறுசுறுப்பை வர வைக்க வேண்டும் என்றால், இந்த வழிபாட்டு முறை உங்களுக்காக மட்டுமே. முதலில் பிள்ளைகளுக்கு சுறுசுறுப்புடன் நன்றாக படிக்க வேண்டும் என்றால் சொல்ல வேண்டிய அந்த விநாயகர் மந்திரம் என்ன என்பதை பார்த்து விடுவோம்.

- Advertisement -

பிள்ளைகள் நன்றாக படிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

‘வல்லபம் ! கஜானனம் ! ஏகதந்தம் !’ பிள்ளைகள் சொல்ல வேண்டிய எளிமையான மந்திர வார்த்தைகள் இதுதான். இந்த மந்திர வார்த்தைகளை பிள்ளைகள் தினமும் சொல்லிவிட்டு, அதன் பிறகு படிக்க அமர்ந்தால் அவர்களுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மக்காக இருக்கும் பிள்ளைகள் கூட நம்பர் ஒன் இடத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையே இன்னொரு விதத்தில் பரிகாரமாக செய்யலாம்.

ஸ்ரீ ராம ஜெயம் எழுதி அந்த பேப்பரை சுருட்டி மாலையாக கட்டி எப்படி அனுமனுக்கு போடுவோம். அதேபோல இந்த மந்திர வார்த்தைகளையும் ஒரு காகிதத்தில் எழுதி சுருட்டி மாலையாகக் கட்டி பிள்ளையாருக்கு போட்டால் குழந்தைகளுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய பிள்ளைகள் கொஞ்சம் பெரிய பிள்ளைகளாக இருக்கிறார்கள் என்றால், அவர்களையே பேப்பரில் இந்த மந்திரத்தை எழுதச் சொல்லுங்கள். அவர்களையே மாலை கட்ட சொல்லுங்கள்.

- Advertisement -

தெரியாது சிறிய குழந்தைகள் என்றால் பெற்றவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பிள்ளைகள் கையில் அந்த மாலையை கொடுத்து பிள்ளையாருக்கு அணிவிக்கலாம். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று மந்திர வார்த்தைகளும் சேர்ந்ததுதான் ஒரு மந்திரம். ஆக மூன்று மந்திர வார்த்தைகளையும் ஒரே பேப்பரில் எழுத வேண்டும்.

தனித்தனியாக பிரித்து தனித்தனியான காகிதத்தில் எழுதக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 27 முறை 108 முறை இப்படி எழுதி அந்த பேப்பரை சுருட்டி மாலையாக கட்டி விநாயகருக்கு போடவேண்டும். இது மார்கழி மாதம். நாளைய தினம் சங்கடஹர சதுர்த்தி புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி பிள்ளையார் வழிபாடு

புதன் என்பது புத்திக்கு உரிய கிரகம். புத்திகாரகன் புதன் என்று சொல்லுவார்கள். நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் புத்தி கூர்மையாகும், பல மடங்கு பலம் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்