- Advertisement -

பண நெருக்கடி நீங்க ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

பங்குனி உத்திரம் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும். அதிலும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பங்குனி உத்திரம் என்பதால் நம்முடைய பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீருவதற்கு முருகப்பெருமானை நினைத்து ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பண நெருக்கடி நீங்க தீபம்

முருகப்பெருமானுக்கு உகந்த தினங்கள் பல இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒரு தினமாக திகழ்வதுதான் பங்குனி உத்திரம். அப்படிப்பட்ட பங்குனி உத்திரம் என்பது இந்த வருடம் ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பொதுவாக பங்குனி உத்திர நாளன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையோடு மட்டுமல்லாமல் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைப்பதற்கும் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். அந்த வகையில் நம்முடைய பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ராகுகாலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அவர்கள் தொழில் செய்யும் இடத்தில் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி லாபம் உண்டாகும். மற்றவர்கள் தங்களுடைய வீட்டு பூஜை அறையிலோ அல்லது சமையலறையிலோ இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.

இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். மாயிலை, வெற்றிலை அல்லது அரச இலை, இவை மூன்றில் ஏதாவது ஒரு இலையை ஆறு என்ற எண்ணிக்கையில் எடுத்து சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அந்த தாம்பாளை தட்டில் வைத்து விட வேண்டும். பிறகு புதிதாக வாங்கிய ஆறு அகல் விளக்குகளில் சந்தனம் குங்குமம் வைத்து அந்த இலைக்கு மேல் வைத்து விட வேண்டும். அந்த அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அதே தாம்பாளத்தில் ஒரு பக்கத்தில் சிறிதளவு துவரம் பருப்பும் மற்றொரு பக்கத்தில் சிறிதளவு பச்சரிசியும் இன்னொரு பக்கத்தில் சில்லறை காசுகள் என்று வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து முடித்த பிறகு அந்த தீப சுடரொளியை பார்த்தவாறு முருகப்பெருமானின் மந்திரமான “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 21 முறை கூற வேண்டும். பிறகு உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் முற்றிலும் தீர வேண்டும் என்று முழுமனதோடு முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த தீபமானது அரை மணி நேரம் எரிந்தால் போதும். பிறகு குளிர வைத்துவிடலாம். இதில் நாம் வைத்திருக்கக் கூடிய பச்சரிசி, துவரம் பருப்பு போன்றவற்றை சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். சில்லறை காசுகளை சுப செலவுகளுக்காக உபயோகப்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே:தடைப்பட்ட காரியங்களுக்கு பரிகாரம்

முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து பங்குனி உத்திர நாள் அன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -