
நம்மில் நிறைய பேருக்கு கடுமையான பண நெருக்கடி இருக்கும். இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் இவ்வளவு தொகை கட்டாயம் கிடைத்தே ஆக வேண்டும் இல்லை என்றால் அவமானம் ஏற்படும் என்ற சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். சில பேருக்கு எல்லாம் வாரா கடனை வசூல் செய்வதில் சிக்கல் இருக்கும். பெரிய தொகையை கடனாக கொடுத்திருப்பார்கள்.
ஆனால் கொடுத்த இடத்திலிருந்து பணம் வராது. கடனாக கொடுத்த அந்த பணத்தை வாங்கி தான், பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். இப்படி பட்ட பண நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டும். கொடுத்த பணத்தை சீக்கிரம் வசூல் செய்ய வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.
இது ஒரு சக்தி வாய்ந்த முழுக்க முழுக்க தாந்திரீக முறையில் சொல்லப்பட்டிருக்கும் பரிகாரம். நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். ஏழு வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பண நெருக்கடியில் இருந்து நீங்கள் மீண்டு வந்து விடுவீர்கள்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு ஸ்பூன் பசும் பால் ஊற்றவும். காய்ச்சிய பசும்பாலை ஊற்றி விடுங்கள். இந்த சொம்பு தண்ணீரை கையில் வைத்துக்கொண்டு உங்களுக்கு என்ன பண நெருக்கடி இருக்கிறதோ, அந்த நெருக்கடி சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் யாருக்கேனும் பணம் கொடுக்க வேண்டுமா, அல்லது யாராவது உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமா? அல்லது உங்களுடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, பணம் தேவையோ. எதுவாக இருந்தாலும் அந்த கோரிக்கையை சொல்லி பிரார்த்தனை செய்து இந்த சொம்பை உங்களுடைய தலைக்கு மேல் பக்கத்தில் வைக்க வேண்டும். தூங்கும் போது உங்கள் கைப்பட்டு இந்த சொம்பு தண்ணீர் கீழே கொட்டாதவாறு கொஞ்சம் இடைவெளி விட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
சனிக்கிழமை இரவு இந்த பரிகாரத்தை செய்து தூங்குங்கள். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து முதல் வேலையாக இந்த சொம்பு தண்ணீரை கொண்டு போய் கருவேல மரத்தடியில் ஊற்றி விட வேண்டும். இதுதான் பரிகாரம். கருவேல மரத்தை எங்கு தேடி செல்வது என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பக்கூடாது.
கருவேல மரத்தில் இந்த தண்ணீரை ஊற்றினால் மட்டும்தான் ஏழு வாரம் ஞாயிற்றுக்கிழமையில் உங்களுடைய பிரச்சனைகள் தீரும். கருவேல மரம் உங்கள் வீட்டு பக்கத்தில் இல்லையா மரம் இருக்கக்கூடிய இடத்தில் இருந்து சின்ன கிளையை உடைத்து வந்து உங்க வீட்டு பக்கத்தில் நட்டு வையுங்க. அந்த செடிக்கு தண்ணீரை ஊத்துங்க.
இதையும் படிக்கலாமே: பஞ்சமி திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு உண்டான பணக்கஷ்டம் தீரும். எந்த பரிகாரம் செய்தாலும் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் தேவை. ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை தொடங்குவதற்கு முன்பும் குலதெய்வத்திடும் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளவும். நீங்க யாருடைய பணத்தையும் வாங்கி ஏமாத்தாதீங்க. உங்களுடைய பணமும் யாராலும் ஏமாற்றப்படாமல் இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் பதிவை நிறைவு செய்து கொள்வோம்.