- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபஞ்சமி திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

பஞ்சமி திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

எதிரி தொல்லை விலக, கண் திருஷ்டி நீங்க, ஏவல் பில்லி சூனியத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, வாராகியை எப்படி வழிபாடு செய்கின்றோமோ, அதே போல தான் அள்ள அள்ள குறையாத செல்வ வளம் கிடைக்கவும், வாராகி வழிபாடு செய்யலாம். இன்றைய தினம் பஞ்சமி திதி. உங்களுடைய வீட்டில் அள்ள அள்ள குறையாத ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்றால் இன்றைய தினம் வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த தகவலை தெரிந்து கொள்வோமா.

அள்ள அள்ள குறையாத செல்வம் தரும் வாராஹி மந்திரம்

வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் பூஜை அறையை தயார் செய்து சாமி கும்பிட முடியாதவர்கள் எல்லாம் கவலையே பட வேண்டாம். நின்ற இடத்தில் இருந்து கண்களை மூடி உங்களுடைய, மன கண்கள் முன்பாக வாராகியை கொண்டு வாருங்கள். 1 நிமிடம் இதற்கு செலவு செய்தால் போதும். பின் சொல்லக்கூடிய மந்திரத்தை மனதார உச்சரித்தாலே வாராகியின் அருள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

உங்களுக்கு நேரம் இருக்கிறது. நீங்கள் இல்லத்தரசிகள். இன்று மாலை வீட்டில் பூஜை செய்ய முடியும் என்றால் பின் சொல்லக்கூடிய வழிபாட்டு முறையை நீங்கள் பின்பற்றவும். பூஜை அறையில் சுத்தம் செய்துவிட்டு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வாராகியின் திருவுருவ சிலை இருந்தால் கட்டாயம் அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

திருவுருவப்படம் இருந்தால் அதை துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து சிவப்பு நிற பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு மண் அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளவும். பூஜை அறையில் அமர்ந்து, ‘ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ !’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் கொண்டை கடலை பொட்டுக்கடலை ஏதாவது ஒரு பொருளை எண்ணிக்கைக்கு நூற்றி எட்டு என்ற எண் கணக்கில் எண்ணி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மந்திரம் சொல்லும்போது ஒவ்வொரு தானியத்தை மற்றொரு கிண்ணத்தில் போட்டு சுலபமாக கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

இன்றைய தினம் மாலை 7 மணிக்கு மேல் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த மந்திரத்தை சொன்னாலும் அந்த பஞ்சமி தேவியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பஞ்சம் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: வெளிநாடு செல்ல ஆஞ்சநேயர் வழிபாடு

மேலே சொன்னது படி தான் உங்களால் பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் சரி, இன்றைய தினம் அந்த வாராஹி தேவி, பஞ்சமி தேவியை மனமுருக நினைத்து இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தாலும் உங்களுக்கான பலன் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்