- Advertisement -

பண வரவை அதிகரிக்கும் சுக்கிர கிருத்திகை

- Advertisement -

பலவிதமான வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக முருகப்பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். நாம் வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் பூர்த்தி செய்யவும் கோரிக்கையும் நாம் வைப்போம். ஒவ்வொரு விதமான கோரிக்கைக்கும் வேண்டுதலுக்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறைகளை பின்பற்றினால் தான் அந்த வழிபாட்டின் பலனால் நம்முடைய வேண்டுதலும் கோரிக்கையும் விரைவில் நிறைவேறும். பொதுவாக செய்யக்கூடிய பரிகாரத்தையும் வழிபாட்டியும் விட ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஏற்ற வழிபாட்டையும் பரிகாரத்தையும் செய்யும் பொழுது அதன் பலன் விரைவிலேயே நம்மை வந்து சேரும். அந்த வகையில் பணம் தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறவும் முருகன் எப்பொழுதும் நம்முடன் இருக்கவும் சுக்கிர கிருத்திகை நட்சத்திர நாளன்று செய்ய வேண்டிய முருக வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுக்கிர கிருத்திகை வழிபாடு

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நட்சத்திரமாக கிருத்திகை நட்சத்திரமும், உகந்த திதியாக சஷ்டி திதியும் திகழ்கிறது. இவை இரண்டுமே ஒன்று சேர்ந்து இன்று இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் இன்று மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானுக்கு உகந்த வெள்ளிக்கிழமை. அதனால் இந்த நாளில் நாம் பணம் தொடர்பான எந்த வேண்டுதலை முன்வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்தாலும் அந்த வழிபாடு விரைவிலேயே நமக்கு பூர்த்தியடையும்.

- Advertisement -

இன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள் இந்த மந்திர வழிபாட்டை நாம் செய்யலாம். எப்பொழுதும் நம் உடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும், நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் முருகன் கை கொடுத்து காப்பாற்றுவார் என்று நினைக்கக் கூடிய நபர்களும் இந்த மந்திரத்தை 15 நிமிடம் முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டும்.

இதோடு மட்டுமல்லாமல் ஒரே ஒரு கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய பிரியாணி இலையை எடுத்து அதில் சிவப்பு நிற ஸ்கெட்ச் பயன்படுத்தி பணவரவை அதிகரிப்பதற்குரிய முருகப்பெருமானின் மந்திரத்தை எழுதி நம்முடைய பணம் வைக்கும் இடத்தில் நாம் வைத்துக் கொள்வதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். நாம் எந்தெந்த இடத்தில் எல்லாம் பணத்தை வைக்கிறோமோ அங்கெல்லாம் ஒவ்வொரு பிரியாணி இலை வீதம் எத்தனை பிரியாணி இலையில் வேண்டுமானாலும் முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை எழுதி வைக்கலாம்.

- Advertisement -

எப்பொழுது இந்த பிரியாணி இலை கிழிக்கிறதோ அப்பொழுது அதை கற்பூரத்தை பயன்படுத்தி எரித்துவிட்டு திரும்பவும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளில் பிரியாணி இலையில் எழுதி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த இரண்டு மந்திரங்களையும் இன்று இரவு 12 மணிக்குள் யாரொருவர் கூறுகிறார்களோ எழுதுகிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினையிலிருந்து முருகப்பெருமான் நம்மை காப்பாற்றுவார்.

மந்திரம்

” ஓம் ஐம் ரீம் வேல் காக்க

- Advertisement -

ஸ்ரீம் ஸ்ரீம் சரவணபவ வசி வசி “

மகாலட்சுமியின் பீஜ மந்திரம் நிறைந்த இரண்டாவது மந்திரத்தை பிரியாணி இலையில் எழுதி பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். மேல் சொன்ன வேல் காக்க மந்திரத்தை 15 நிமிடம் முழுமனதோடு முருகப்பெருமானையும் முருகப்பெருமான் கையில் இருக்கக்கூடிய வேலையும் நினைத்து கூற வேண்டும்

இதையும் படிக்கலாமே:

முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் ஒரு சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் முருகப்பெருமானை நினைத்து நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அதற்கு அதிகளவில் பலன் கிடைக்கும். முழு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டையும் செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -