
பணம் பத்தும் செய்யும் என்று நம்முடைய முன்னோர்கள் பழமொழியாக கூறி வைத்திருக்கிறார்கள். இந்த காலத்தில் அது நூற்றுக்கு நூறு அல்ல 100க்கு 1000 சதவிகிதம் உண்மையாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பணவரவு என்பது நமக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கொண்டே இருந்தால்தான் இந்த உலகத்தில் நம்மால் நிம்மதியாக வாழ முடியும். ஏதாவது ஒரு ரூபத்தில் வருவதற்கு நாம் ஏதாவது ஒரு முயற்சியை செய்ய வேண்டும் அல்லவா? அப்படி பணவரவு அதிகரிப்பதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடைய செய்ய வேண்டிய ஒரு சனிக்கிழமை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அமாவாசை முடிந்து வரக்கூடிய ஒவ்வொரு கிழமையும் பலவிதமான வழிப்பாட்டிற்கும் பரிகாரத்திற்கும் உகந்த கிழமைகளாக திகழ்கின்றன. காரணம் அவை வளர்பிறையில் வரக்கூடியது என்பதுதான். அந்த வகையில் வளர்பிறையில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று நாம் மிகவும் எளிமையாக எந்தவித செலவு இல்லாமல் செய்யக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரம் ஒன்று இருக்கிறது. இந்த பரிகாரத்தை யார் ஒருவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்கிறார்களோ அவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமே இருக்காது என்று கூட கூறலாம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு கிழியாத நல்ல அரச இலை ஒன்று வேண்டும். அரச இலையை சனிக்கிழமை அரசமரத்தில் இருந்து பறிப்பதில் எந்த தவறும் கிடையாது. அருகில் இருக்கக்கூடிய அரச மரத்திற்கு சென்று அதை தொட்டு வணங்கி விட்டு அரச மரத்தை சுற்றி வந்து ஒரே ஒரு அரச இலையை பறித்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இந்த இலையை தண்ணீர் ஊற்றி கழுவ கூடாது. அடுத்ததாக எச்சில் படாத தயிரை சிறிதளவு எடுத்து அதில் மஞ்சள் தூளை கலந்து மோதிர விரலை பயன்படுத்தி அந்த அரச இலையில் “ரீம்” என்று எழுத வேண்டும். சிறிது நேரம் அதை காய விட்டு பிறகு அதை நம்முடைய மணி பர்ஸில் வைக்க வேண்டும்.
ஒரு வாரம் முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். அடுத்த சனிக்கிழமை இந்த இலையை அரச மரத்தடியில் போட்டுவிட்டு புதிதாக ஒரு இலையை பறித்து இதே போல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நம்முடைய பர்ஸில் பணம் என்பது எப்பொழுதும் நிறைவாக இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ரூபத்தில் வந்து கொண்டே இருக்கும். வியாபாரமும் சிறப்பாக நடைபெறும்.
இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு
வீட்டில் சம்பாதிக்க கூடிய ஒவ்வொரு நபரும் இந்த அரச இலையை தங்களுடைய பர்சில் வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களுடைய சம்பாத்தியம் அதிக அளவில் பெருகிக்கொண்டே செல்லும். முழு நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.