- Advertisement -

பண வசியம் ஏற்பட மார்கழி செவ்வாய் பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அப்படி பணத்தை சம்பாதிக்கும் பட்சத்தில் அந்த பணம் நம்மிடம் தங்க வேண்டும். தேவையற்ற வீண்விரயங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும். இதற்கு நமக்கு பண வசியம் என்பது இருக்க வேண்டும். ஒருவருக்கு பணவசியம் இருந்தால் தான் அவரிடம் பணம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அப்படி பண வசியம் இல்லாத நபர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களிடம் பணம் தங்கவே தங்காது என்று கூட கூறலாம். இந்த பண வசியத்தை ஏற்படுத்துவதற்கு மார்கழி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மார்கழி செவ்வாய் பரிகாரம்

மார்கழி மாதம் என்பதே மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவே திகழ்கிறது. அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது அதீத சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரங்கள் நமக்கு முழு பலனை தரும் என்றே கூறலாம். அப்படி செவ்வாய்க்கிழமை அன்று செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தால் நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு பண வசியமும் ஏற்படும். அதனால் பணம் ரீதியான பிரச்சினைகளும் நெருக்கடிகளையும் நீங்கி கடன் பிரச்சனையும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு செய்ய வேண்டும். இதற்கு ஒரே ஒரு கிழியாத நல்ல வெற்றிலை வேண்டும். அந்த வெற்றிலையை முதலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மேல் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணையை விட்டு அந்த இலை முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இப்பொழுது மஞ்சள் பன்னீர் ஊற்றி குழைத்து பிள்ளையாராக தயார் செய்து அந்தப் பிள்ளையாரை வெற்றிலையின் மேல் வைக்க வேண்டும்.

அந்த பிள்ளையாருக்கு அருகம்புல், எருக்கம் பூ அல்லது வாசனை நிறைந்த மலர்கள் என்று எது கிடைக்கிறதோ அதை வைக்க வேண்டும். இதை அப்படியே உங்கள் வீட்டு நிலை வாசலின் வலது புறத்தில் வைத்து விடுங்கள். பிறகு நீங்கள் எப்பொழுது போல் உறங்கச் செல்லலாம். மறுநாள் காலையில் எழுந்து இந்த மஞ்சள் பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து வாசல் தெளிப்போம் அல்லவா? அதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றிலையை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாக்கும். மேலும் பண வசியம் ஏற்பட்டு பணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீர ஆரம்பிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:பண பிரச்சனையை தீர்க்கும் துவரம் பருப்பு பரிகாரம்

தாந்திரீக பரிகாரங்களை முழுமனதோடு செய்பவர்களுக்கு அந்த பரிகாரம் முழுமையான பலனை தரும் என்பதால் முழுமனதோடு இந்த பரிகாரத்தை செய்து பண வசியத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -