- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண பிரச்சனையை தீர்க்கும் துவரம் பருப்பு பரிகாரம்

பண பிரச்சனையை தீர்க்கும் துவரம் பருப்பு பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக திகழ்வது பணம்தான். யார் ஒருவருக்கு அவர்களுடைய தேவைக்கேற்றார் போல் பணவரவு ஏற்படுகிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு ஏற்படவில்லை என்றால் அதனால் பல விதமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துவரம் பருப்பை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

துவரம் பருப்பு பரிகாரம்

தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாக திகழ்வதுதான் மார்கழி மாதம். அதுவும் இன்றைய தினம் நவமி திதி வருகிறது. இது அமாவாசை பௌர்ணமியில் இருந்து ஒன்பதாவது திதியாக வருகிறது. மேலும் இன்றைக்கு செவ்வாய்க்கிழமை. செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாகவும் 9 திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இன்றைய நாளில் இரவு 9 மணியிலிருந்து 9:59க்குள் துவரம்பருப்பை வைத்து நாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி இப்பொழுது தெரிந்துகொள்வோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒன்பதே ஒன்பது துவரம் பருப்பு இருந்தால் போதும். முழு துவரையாக இருந்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். முழு துவரை இல்லை என்பவர்கள் சாதாரணமாக உபயோகப்படுத்தக்கூடிய துவரம் பருப்பை கூட உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இரவு 9 மணி ஆன பிறகு அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் 9 எண்ணிக்கையில் துவரம் பருப்பை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த ஸ்விட்ச் வேர்டை ஒன்பது முறை கூற வேண்டும். “count divine find 520 341 808 move on clear”. இப்படி ஒன்பது முறை நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும். இதில் இருக்கக்கூடிய எண்களை தனித்தனியாக தான் கூற வேண்டுமே தவிர்த்து மொத்தமாக சேர்த்து கூறக்கூடாது. இந்த 9 வார்த்தையை 9:00 மணிக்கு மேல் கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். பணவரவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி கூறி முடித்த பிறகு இந்த துவரம்பருப்பை எடுத்து நாம் சமையலுக்காக வைத்திருக்கக்கூடிய துவரம் பருப்புடன் கலந்து சமைத்துக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எங்கிருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். மதம் என்பது இந்த பரிகாரத்திற்கு பொருந்தாது.எந்த மதத்தை சேர்ந்தவர்களும் செய்யலாம். மேலும் தீட்டு, தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்கு பணம் வேண்டும்? யாருடைய பணவரவு சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ? அவர்களை நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அவர்களுக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். அவர்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனையும் தீரும்.

இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டம் சொல்லும் அண்டங்காக்கை

மிகவும் எளிமையாக அனைவரின் இல்லத்தில் இருக்கக்கூடிய இந்த ஒரு பொருளை வைத்து இந்த வார்த்தையை மட்டும் முழு மனதோடு நம்பி கூறுபவர்களுக்கு இந்த பிரபஞ்சம் பணவரவை அதிகரித்து பணம் தொடர்பான பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்