- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இன்று நீங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரத்தினால் உங்கள் மன கஷ்டம், பண கஷ்டம் தீர்ந்து வளமான வாழ்வு கிடைக்கும்

ஒவ்வொரு மனிதனும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிப்பதென்பது நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்காக தான். ஆனால் என்ன தான் சம்பாதித்தாலும் ஒரு சில வீடுகளில் எப்பொழுதும் சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் கண் திருஷ்டி, பணப்பற்றாக்குறை இவற்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையேயும், உறவினர்களுக்கிடையேயும் சண்டைகள் வந்து கொண்டிருந்தால் நிம்மதியான வாழ்க்கை என்பதே இருக்காது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் பிரச்சனையாக சென்று கொண்டிருந்தால் நமது வாழ்க்கையை வளமானதாகவும் மாற்ற முடியாது. எனவே முதலில் பண கஷ்டமாக இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும். மன கஷ்டமாக இருந்தால் அதனையும் சரிசெய்ய வேண்டும். இவை இரண்டையும் சரி செய்ய இந்த பூஜையை சதுர்த்தி திருநாள் அன்று செய்வதால் நல்ல பலன் கிடைத்திடும். வாருங்கள் இந்த பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாகவே மாதத்தில் இரண்டு நாட்கள் சதுர்த்தி வருகிறது. அதில் பௌர்ணமியை அடுத்து தேய்பிறையில் வரும் சதுர்த்தியை கிருஷ்ணபட்ச சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். அமாவாசை முடிந்து வரக்கூடிய நான்காவது நாள் சதுர்த்தியை வளர்பிறை சதுர்த்தி, சுக்லபட்ச சதுர்த்தி என்று அழைக்கிறோம். இவ்வாறு வரக்கூடிய சதுர்த்தி தினத்தை வருகின்ற கிழமையை வைத்து ஒவ்வொரு வித பெயர்களில் அழைக்கப்படுகிறது.

- Advertisement -

அவ்வாறு திங்கட்கிழமை தினத்தில் வரக்கூடிய சதுர்த்தி தினத்தை சோமவார சதுர்த்தி என்று அழைக்கிறோம். சோமவாரம் என்றாலே அது சிவனுக்கு உரிய தினமாகும். அதிலும் திங்கட்கிழமை இத்தினம் வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் இந்த சிறப்பு பூஜையை செய்வதன் மூலம் தங்களிடம் பணம் வருவதற்கான தடைகளை தகர்த்தெறிய முடியும்.

சதுர்த்தி தினம் என்றாலே அன்றைய நாள் முழுவதும் விரதம் இருந்து பூஜை செய்வதென்பது வழக்கம் தான். அவ்வாறு சதுர்த்தி நாளன்று காலையில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்தை துடைத்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, மலர் சூட்டி, அகல் தீபமேற்றி விநாயகரை வணங்கி விட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாள் முழுவதும் விரதம் இருந்து மாலை வேளையில் வினாயகரின் முன் தீபம் ஏற்றி விநாயகருக்கு பிடித்த உணவுகளை நைவேத்தியமாகப் படைத்து தீப தூப ஆராதனை செய்ய வேண்டும் அதன்பிறகு சிறிதளவு அருகம் புல்லை எடுத்துக் கொண்டு அதனை “ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகரே போற்றி” என்று சொல்லிக்கொண்டே 108 முறை அருகம்புல்லை விநாயகரின் அருகில் வைக்க வேண்டும்.

அதேபோல் 108 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு, அவற்றை ஒவ்வொன்றாக கையிலெடுத்து, “ஓம் செல்வவிநாயகரே போற்றி” என்று சொல்லி ஒவ்வொரு நாணயமாக விநாயகரின் பாதத்தில் வைக்க வேண்டும். இந்த பூஜையை செய்யும் பொழுது எனக்கிருக்கும் பணக்கஷ்டம் தீர்ந்து நல்வழி பிறக்க வேண்டும் என நமது மனதிற்குள் முழுவதுமாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பூஜை செய்து முடித்த பின்னர் இந்த ஒரு ரூபாய் நாணயங்களை ஒரு மஞ்சள் துணியில் வைத்து, அதன் மீது சிறிதளவு அருகம் புல்லையும் வைத்து, ஒரு மூட்டையாகக் கட்டி, பணம் வைக்கும் பீரோவில் வைத்து கொள்ள வேண்டும். பிறகு அருகம்புல்லில் சிறிதளவு எடுத்து நாம் பணம் வைக்கும் பரிசில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பண தட்டுப்பாடு குறையும். பணம் நம்மிடம் அதிகமாக பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -