- Advertisement -

இஷ்டப்படி பணம் சேர ஏகாதசி பரிகாரம்

- Advertisement -

பணக்கார தெய்வம் என்று கூறினால் அது பெருமாள் தான். பெருமாளும் மகாலட்சுமி தாயாரும் பணக்கார தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். இவர்களை வழிபாடு செய்பவர்களுக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய திதியாக கருதப்படுவது தான் ஏகாதசி. அதிலும் பெருமாளுக்குரிய தினமாக கருதப்படும் சனிக்கிழமை அன்று வருவது மேலும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட தினத்தன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

இஷ்டப்படி பணம் சேர ஏகாதசி பரிகாரம்

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் வரக்கூடிய ஏகாதசி திதிக்கு ஒவ்வொரு பெயர்கள் இருக்கிறது. அந்த மாதங்களுக்கு ஏற்றார் போல் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நமக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி திதியை புத்திர ஏகாதசி என்று கூறுகிறோம்.

- Advertisement -

இந்த ஏகாதசி நாளன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஏகாதசி சனிக்கிழமையோடு சேர்ந்து வருவது என்பது இன்னும் கூடுதல் விசேஷமாக திகழ்கிறது. அன்றைய தினம் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை வாங்கி தருவது, அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தருவது போன்ற விஷயங்களை மேற்கொள்ளலாம். விரதம் இருந்து வழிபாடும் செய்யலாம்.

இந்த அற்புதமான ஏகாதசி திதி அன்று நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நாம் எதிர்பார்த்த பணம் வரவை நமக்கு கொண்டுவந்து சேர்க்கும். அந்த பரிகாரத்தைப் பற்றி இப்பொழுது தெரிந்துகொள்வோம். இந்த பரிகாரத்திற்கு பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்கள் வேண்டும். அவை தான் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு. இவை மூன்றையும் சரிசமமான அளவு எடுத்து தனித்தனியாக பொடி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -
பிறகு இதை மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது பன்னீர் ஊற்றி அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து கொள்ள வேண்டும். பிறகு தீபம் ஏற்றி வைத்து பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு இந்த உருண்டைகளை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

பீரோவில் வைக்கலாம், சமையலறையில் வைக்கலாம், நாம் உபயோகிக்கும் பரிசில் வைக்கலாம், தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கல்லாப்பெட்டியில் வைக்கலாம், அதேபோல் வரவேற்பு அறையில் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் இந்த உருண்டையை வைத்து விடலாம். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நேர்மறை ஆற்றல்கள் மாறும். மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருளால் நாம் நினைத்த பணவரவு நமக்கு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:பணவரவை அதிகரிக்க மகாலட்சுமி பூஜை

இந்த எளிமையான பரிகாரத்தை சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். முடிந்த அளவிற்கு காலையில் செய்வது என்பது மிகவும் விசேஷம். முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -