
இன்றைய காலத்தில் கடன் இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு கடன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நீக்கமர நிறைந்திருக்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இந்த கடன் பிரச்சனை ஏற்படுவதற்கு பண பற்றாக்குறையே முக்கியமான காரணமாக திகழ்கிறது. மேலும் இந்த கடன் பிரச்சனையில் இருந்து நாம் வெளியே வருவதற்கும் நமக்கு பணம் தேவைப்படுகிறது. ஆக மொத்தம் பணத்தால் தான் கடன் பிரச்சனை என்பது முற்றிலும் தீரும்.
இந்த கடன் பிரச்சினை தீர்வதற்கு பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியை நாம் மேற்கொள்வோம். அப்படி மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் கடனிலிருந்து நம்மால் வெளியே வர முடியாது. நம்முடைய கடன் பிரச்சினையிலிருந்து நாம் வெளியே வருவதற்குரிய பணவரவு ஏற்படுத்துவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியைத் தரும். அந்த வகையில் மைத்ரேய முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கடன் என்றாலே அதற்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் அதிக அளவில் கடன் சுமை இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை செவ்வாய் கோரையில் கடனை திருப்பித் தருவதன் மூலம் அவர்களுடைய கடன் விரைவில் அடையும் என்று கூறப்படுகிறது. அதே போல் தான் செவ்வாய் பகவானுடன் தொடர்புடைய முகூர்த்தமாக திகழ்வதுதான் மைத்ரேய முகூர்த்தம். மைத்ரேய முகூர்த்தத்தில் யார் ஒருவர் வாங்கிய கடனிலிருந்து அசல் தொகையை சிறிதளவாவது திருப்பி செலுத்துகிறார்களோ அவர்களுக்கு விரைவிலேயே கடன் பிரச்சனை தீரும் என்று கூறப்படுகிறது. பலரும் இதை அனுபவபூர்வமாகவும் உணர்ந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் மே மாதம் 25ஆம் தேதி விடியற்காலை 3:19 மணிக்கு தொடங்கி 5:06 மணிக்கு மைத்ரேய முகூர்த்தம் என்பது ஏற்படுகிறது. இந்த நேரத்தில் கடனை திருப்பி செலுத்துவதற்குரிய வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு. அதனால் கடனை தீர்ப்பதற்குரிய பணவரவை ஏற்படுத்துவதற்கு சில பரிகாரங்களை நாம் செய்யலாம். இதற்கு இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் எழுந்து முகம் கை கால்களை கழுவி விட்டு ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை, சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் எழுதக்கூடிய பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதை வைத்து பின்வரும் இந்த பண ஈர்ப்பு வாசகத்தை 27 முறை எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்த பிறகு அந்த பேப்பரை மடித்து பூஜை அறையில் வைத்து விடுங்கள் இந்த முறையில் தொடர்ச்சியாக மூன்று மைத்ரேய முகூர்த்தங்கள் நாம் எழுத வேண்டும்.
ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பேப்பரை எடுத்து அதில் 27 முறை எழுதி மடித்து அந்த இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி தொடர்ச்சியாக மூன்று மைத்ரேய முகூர்த்தம் நாம் இந்த பண ஈர்ப்பு வாசகத்தை எழுதும் பொழுது கடன் தீர்ப்பதற்காக நாம மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். அதன் மூலம் பணவரவு உண்டாகும். அதனால் விரைவிலேயே கடன் பிரச்சனையும் தீரும். கடன் பிரச்சினை தீர ஆரம்பித்ததும் நாம் எழுதி வைத்திருந்த அந்த மூன்று பேப்பரையும் வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று எரித்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:தங்கம் சேர குபேர பரிகாரம்
எளிமையான இந்த பண ஈர்ப்பு வாசகத்தை எந்தவித சந்தேகமும் இல்லாமல் மைத்ரேய முகூர்த்த நேரத்தில் எழுதுவதன் மூலம் விரைவிலேயே பணம் நம்மிடம் வந்து சேர்வதற்குரிய அற்புதமான வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்