
நாளை புரட்டாசி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இந்த மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். ஊர் முழுவதும் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் நம் காதில் கேட்கும். இந்த நாமத்தை காதல் கேட்கும் போதே நம்முடைய கஷ்டத்தில் பாதி தீர்ந்துவிடும். அதிலும் இன்றைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டம் என்றால் அது பணக்கஷ்டம். கடன் சுமை. பெருமாளை வழிபாடு செய்யக்கூடிய பக்தர்களுக்கு பணக்கஷ்டம் சீக்கிரம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அந்த திருப்பதி பாலாஜி கோவிலில் கொட்டாத பணமா. திருப்பதி பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் திருப்பும் உண்டாகும். இந்த ஒரு புரட்டாசி மாதத்திற்குள் உங்கள் வீட்டு பணக்கஷ்டம் எல்லாம் சரியாகி, கடன் சுமையெல்லாம் தீர்ந்து நீங்களும் செல்வ செழிப்பாக வாழ வேண்டுமென்றால் நாளைய தினம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பணம் ஈர்க்கும் ஆன்மீகம் பரிகாரத்தைப் பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளிக்கின்ற தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு, அந்த தீர்த்தத்தில் குளித்து விடுங்கள். உங்கள் உடம்பை பிடித்த பீடை விலகும். நாளை காலை 6:00 மணியிலிருந்து 6:10க்குள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறவிட்டவர்கள் மாலை 6:00 டு 6:10குள் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்கள் வீட்டில் துளசி இலையின் வாசம் வீச வேண்டும். முதலில் துளசி இலைகளுக்கு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நிலை வாசலில் கொஞ்சம் துளசி இலை, பூஜை அறையில் கொஞ்சம் துளசி இலை வைத்து விடுங்கள். காலையில் நிலை வாசலைக் கூட்டி அழகாக அலங்காரம் செய்து கோலம் போட்டு விட வேண்டும். நிலை வாசலில் மஞ்சள் குங்குமப்பொட்டு அழகாக வைத்திருக்க வேண்டும்.
நிலை வாசலின் வலது பக்கத்தில் ஒரு மண் அகல் விளக்கு அல்லது தூபக்கால் வைத்துக் கொள்ளுங்கள். திருப்பதி வெங்கடாசலபதியை மனமுருக நினைத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை சொல்லுங்க. அந்த பச்சை கற்பூரத்தை ஏற்றி நாராயணரை வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.
நிலை வாசலில் நாளைய தினம் திருப்பதி பெருமாளை நினைத்து, பச்சை கற்பூரத்தை ஏற்றி “ஓம் நமோ நாராயணா” மந்திரத்தை சொல்லி எவர் ஒருவர் வழிபாடு செய்கிறீர்களோ, அவர்கள் வீட்டில் பண கஷ்டம் என்பதை இருக்காது. அந்த பச்சைக் கற்பூரத்தின் ரூபத்தில் பெருமாள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவார். பச்சைக் கற்பூரத்தை ஏற்றி அந்த கற்பூரம், நிலை வாசலிலேயே எரிந்த அணையும் வரை அந்த இடத்திலேயே வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் கட்டு கட்டாக பணம் என்று லட்சுமி கடாட்சம் அந்த வீட்டில் தாண்டவம் ஆட துவங்கிவிடும். நாளை நிலை வாசலில் பச்சைக் கற்பூரத்தை ஏற்றுவது என்பது ஒரு சிறு எளிமையான பரிகாரம்தான். ஆனால் இந்த பரிகாரத்திற்கு பின்னால் மிகப்பெரிய பவர் இருக்கிறது. பெரிய பெரிய கஷ்டங்களுக்கு கூட சின்ன சின்ன பரிகாரங்கள் சுலபமாக ஒரு தீர்வை காட்டிக் கொடுக்கும். அதுபோலதான் உங்களின் அதீத பண கஷ்டத்தை சரி செய்ய உங்களை தேடி வந்திருக்கும் ஒரு எளிமையான பரிகாரம் இது.
நாளைய தினத்தை தவற விடாதீங்க. புரட்டாசி மாதம் முதல் நாள், அதுமட்டுமல்லாமல் நாளை பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதியும் இருக்கிறது நாளைய தினம் இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம். அனைவருக்கும் பெருமாளின் அருள் கிடைக்கும். நாளை முடிந்தால் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் இருந்து கொஞ்சம் தீர்த்தம் கொஞ்சம் துளசி இலைகளை வாங்கி வந்து பீரோவில் வையுங்கள்.
இதையும் படிக்கலாமே: 17-9-2025 புரட்டாசி முதல் நாள் வழிபாடு
முடிந்தால் உங்கள் வீட்டு பெருமாளுக்கு பச்சை கற்பூரத்தை தாடை பகுதியில் சாத்தி வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பம் சீரும் செழிப்புமாக நன்றாக இருக்கும் என்பதில் ஒருதுளி அளவும் சந்தேகம் இருக்காது. நம்பிக்கை இருந்தால் நாளைய தினம் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.