
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். புதன் பகவான் புத்திகாரகனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய செல்வ செழிப்பிற்கு நல்ல ஒரு வழியையும் காட்டக்கூடியவராகவும் திகழ்கிறார். அதனால் தான் புதன் பகவானுடைய அதி தேவதையாக பெருமாள் திகழ்கிறார். அப்படிப்பட்ட புதன் பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவது தான் புதன் கிழமை. புதன்கிழமை செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் நம்முடைய அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவதோடு பணவரவையும் அதிகரிக்கும் என்றே கூற வேண்டும். அந்த வகையில் புதன்கிழமை அன்று வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவருடைய கையில் பணம் தாராளமாக புலங்க வேண்டும் என்றால் அவருக்கு சுக்கிரனின் அம்சம் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போலவே புதன் பகவானின் அம்சமும் இருந்தால்தான் பணவரவு என்பது உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட புதன் பகவானுக்குரிய கிழமையான புதன்கிழமை அன்று புதன் பகவானுக்கு உரிய ஒரு தானியத்தை வைத்து எளிமையான முறையில் நாம் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது ஐந்தே நாட்களில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு பணவரவு வரும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை புதன் கிழமை இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்து விட வேண்டும். புதன் பகவானுக்குரிய தானியமாக பச்சைப்பயிறு திகழ்வது போலவே வெந்தயமும் புதன் பகவானுக்குரிய தானியமாகவே கருதப்படுகிறது. மேலும் இது குரு பகவானின் அம்சம் பொருந்திய மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்பதால் இதற்கு கூடுதல் பலன் உண்டு. மேலும் வெந்தயம் மகாலட்சுமிக்குரிய தானியமாகவும் கருதப்படுகிறது. யார் ஒருவர் வீட்டில் வெந்தயம் நிறைவாக இருக்கிறதோ அந்த வீட்டில் பண வரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்று கூறப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் பலரும் வெந்தய டப்பாவில் தான் தங்களுடைய பணத்தை சேர்த்து வைக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். அவ்வளவு சிறப்பு மிகுந்த வெந்தயத்தை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும்.
புதன்கிழமை அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் தொடைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாணயத்தின் ஒரு பக்கத்தில் 520 என்ற எண்ணை பச்சை நிற மையை பயன்படுத்தி எழுத வேண்டும். மற்றொரு பக்கத்தில் முடிவிலி வடிவத்தை வரைய வேண்டும். அதாவது இன்ஃபினிட்டி சிம்பலை வரைய வேண்டும். பிறகு இதனுடன் ஐந்து எண்ணிக்கையில் வெந்தயத்தை எடுத்து நாம் படுக்கும் தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு படுக்க வேண்டும்.
அவ்வாறு படுக்கும் பொழுது நம்மிடம் நிறைய, அதிக அளவில் பணம் இருக்கிறது அதன் மூலம் நாம் சந்தோஷமாக இருக்கிறோம். நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது என்ற கற்பனையுடன் உறங்கச் செல்ல வேண்டும். மறுநாள் காலையில் எழும் பொழுது தலையணைக்கு கீழே இருக்கக்கூடிய இந்த நாணயம் மற்றும் வெந்தயத்தை பார்த்து தான் கண் விழிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 5 நாட்கள் செய்ய வேண்டும். இரவு படுக்கச் செல்லும் பொழுது தலையணைக்கு கீழே வைத்து விட்டு காலையில் கண்விழித்து அதை பார்த்த பிறகு எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் இரவு படுக்கும் பொழுது எடுத்து தலையணைக்கு கீழே வைக்க வேண்டும்.
ஐந்து நாட்கள் முடிந்து ஆறாவது நாள் காலையில் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். வெந்தயத்தை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் எதிர்பார்க்காத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்றும் வீண் விரயம் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:மரத்தடி, கல் தெய்வங்களை வழிபடலாமா?
அனைவரின் இல்லத்திலும் இருக்கக்கூடிய வெந்தயத்தை வைத்து இந்த முறையில் எளிமையான ஒரு பரிகாரத்தை செய்பவர்களுக்கு புதன் பகவானின் அருளால் பண வரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.