கோவில்களில் ஆகம விதிப்படி முறைப்படி பூஜைகள் செய்து, ஆவாகனம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி, கோலாகலமாக கொண்டாடப்பட்ட தெய்வ விக்கிரகங்களுக்கு மட்டும் தான் சக்தி இருக்குமா? மனிதனால் தெரு ஓரங்களில் உருவாக்கப்படும் மரத்தடி தெய்வங்களுக்கும், மனிதனால் தெய்வமாக உருமாறிய மரங்களுக்கும் சக்தி இருக்காதா? அவர்களை வழிபடுவதால் பலன்கள் கிடைக்குமா? இல்லையா? என்பது போன்ற தகவல்களை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
பழங்காலங்களில் யாரோ ஒருவருடைய கனவில் வந்து நான் இங்கே இருக்கிறேன் என்று கடவுளே வந்து அருள் கொடுப்பார்கள். அதன்படி அந்த இடத்தில் மகா ஆலயங்கள் எழுப்பப்படும். சுயம்புவாக தானாகவே யாரும் செதுக்காமல் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த தெய்வங்களும் நம் நாட்டில் ஏராளம் உண்டு. ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து சக்தி கொடுத்த தெய்வங்களும் உண்டு.
சக்தி வாய்ந்த மரங்களுக்கு அடியில் சிலைகளை வைத்து பூஜை செய்பவர்களும் உண்டு. மரத்திற்கு கண், காது, மூக்கு, வாய் எல்லாம் வைத்து அம்மன் ஆக்கி வழிபடுபவர்களும் உண்டு. எப்படிப்பட்ட தெய்வங்களாக இருந்தாலும், அந்த தெய்வம் நினைத்தால் மட்டுமே அங்கு ஆலயத்தை எழுப்ப முடியும். தெய்வத்தின் அனுமதி இன்றி எவர் ஒருவராலும் ஆலயத்தை எழுப்ப முடியாது என்பதை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு சக்திகள் நிறைந்து காணப்படுகின்றன. கோவிலுக்குள் சென்றாலே ஒரு விதமான நேர்மறை ஆற்றல் நமக்குள் பொங்குவதை நம்மால் உணர முடிகிறது. அந்த சக்தி வாய்ந்த உணர்வு வேறு எந்த இடத்திலும் நமக்கு கிடைப்பது கிடையாது. இதைத் தான் நம் உள்ளுணர்வால் தெய்வ சக்தி என நாம் கொள்கிறோம். இந்த சக்தி எங்கெல்லாம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் இறைவன் அருள் பாலிக்கின்றார்.
மரத்தடியில் இருக்கும் தெய்வம் தானே என்று எளிமையாக நினைத்து விடக்கூடாது. இறைவன் குடியிருக்கும் அந்த மரம் தான் ஆலயம். ஆலயத்தையும் சேர்த்து வழிபடும் பொழுது கிடைக்க வேண்டிய அத்தனை பலன்களும் முழுமையாக நமக்கு கிடைக்கும். அரச மரம், ஆலமரம், வன்னி மரம் என்று சக்தி வாய்ந்த மரங்களுக்கு அடியில் அமைந்துள்ள தெய்வங்களுக்கு முழுமையான சக்திகள் இருக்கும். அவர்களை வழிபடும் பொழுது இயற்கையுடன் இணைந்த தெய்வ சக்தியால் கிடைக்கக்கூடிய பலன்களை நாம் பெறலாம்.
இதையும் படிக்கலாமே:
தேய்பிறை அஷ்டமி திதியில் குளிக்கும் முறை
சிலைகளே இல்லாமல், விக்ரகங்களே இல்லாமல், மரத்தையே தெய்வமாக்கி வழிபடுபவர்களும் உண்டு. சிலர் கல்லை கூட விட்டு வைப்பதில்லை, அதையும் தெய்வமாக்கி பொட்டு வைத்து, பூ வைத்து வழிபடுவார்கள். முன்பு கூறியது போல தெய்வ அனுமதி இல்லாமல் யாராலும் அந்த இடத்தில் கோவிலை உருவாக்க முடியாது. தெய்வத்தின் உடைய அனுக்கிரகமும், அனுமதியும் கிடைக்கப் பெற்று உருவாகிய எந்த சிலையும், மரமும், கல்லும் தெய்வ சக்தியை உள்வாங்குகிறது, அதனால் அதை வழிபடுபவர்களுக்கும் தெய்வத்தின் உடைய அருள் கிடைத்து உரிய பலன்களும் உண்டாகப் பெறும். பணத்திற்காக மட்டுமே திடீரென முளைத்து நிற்கும் சிறு சிறு போலி செட்டப் கோவில்களும், தெய்வங்களும் அதை உருவாக்கியவர்களுக்கும், உரிமை ஆக்கியவர்களுக்கும் உரிய தண்டனையை அந்த கடவுளே கொடுப்பார்.