- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏகாதசி வழிபாடு

தெய்வங்களிலே பணக்கார தெய்வமும் பணத்திற்கான வழிபாட்டிற்குரிய தெய்வம் எனில் அது பெருமாளை தான் குறிக்கும். அத்தகைய பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த தினமாக ஏகாதசி கருதப்படுகிறது. பல தினங்களில் ஏகாதசி திதியானது மிகவும் முக்கியமானதாகவும் உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க இந்த நாளில் நம் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க பெருமாளை எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணம் சேர ஏகாதசி வழிபாடு

இந்த ஏகாதசி வழிபாட்டை விரதம் இருந்து செய்பவர்கள் செய்யலாம். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவை உட்கொண்டு அன்றைய தினம் அசைவத்தை கட்டாயமாக தவிர்த்து விட்டு வழிபாடு செய்யலாம். இந்த வழிபாடு செய்ய நாளைய தினத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து விட்டு பெருமாள் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதேபோல் அன்றைய தினத்தில் பெருமாளுக்கு துளசி மாலை, துளசி தீர்த்தம் போன்றவற்றை கட்டாயமாக வைக்க வேண்டும். பெருமாள் வழிபாட்டில் துளசி இல்லை என்றால் வழிபாடு முழுமை பெறாது. ஆகையால் இதையெல்லாம் முதல் நாளே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இன்றைய தினத்தில் உங்களால் முடிந்த எளிமையான நெய்வேத்தியம் ஏதேனும் ஒன்றை செய்து வைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது பணம் சேர நாம் செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம். பெருமாளுக்கு உகந்த பொருட்களில் பச்சை கற்பூரம் முதன்மையானதாக சொல்லப்படுகிறது. இது மகாலட்சுமி தாயாருக்கு உகந்தது. இந்த பச்சைக் கற்பூரத்தை நன்றாக தூள் செய்து கொள்ளுங்கள். இத்துடன் சிறிதளவு ஏலக்காய் பொடி, கிராம்பு பொடி, சேர்த்து இந்த கலவையை சிறிதளவு பன்னீர் ஊற்றி குழைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த உருண்டைக்கு கணக்கு இல்லை உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை உருண்டைகளை நாம் தயார் செய்து கொள்ளலாம். இதை பெருமாளின் பாதத்தில் வைத்து விட்டு “ஓம் நமோ நாராயண” என்ற இந்த மந்திரத்தை 108 முறை மனதார சொல்ல வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை எல்லாம் காட்டிய பிறகு இந்த உருண்டைகளை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம்.

அதே போல் வியாபாரம் செய்பவர்கள் தொழில் செய்யும் இடத்திலும் வைக்கலாம். மணி பர்சில் ஒரு சிறிய கவரில் போட்டு வைத்துக் கொள்ளலாம். சமையலறையிலும் ஒரு சிறிய தட்டு வைத்து வைக்கலாம். இதைத் தவிர்த்து வீட்டில் நல்ல நேர்மறை ஆற்றல் பெருக வரவேற்பறை படுக்கை அறை போன்றவற்றிலும் இந்த உருண்டைகளை வைக்கலாம். இதில் சேர்த்து இருக்கும் பொருட்கள் அனைத்துமே பண ஈர்ப்பையும் பணத்திற்கான தெய்வங்களின் அனுகிரகத்தையும் பெற்ற பொருட்கள்.

இதையும் படிக்கலாமே: ஆன்மீகத்தில் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள்.

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பொழுது நிச்சயம் பண வரவை ஈர்த்துக் கொடுக்கும். அது மட்டுமின்றி இதனுடைய நேர்மறை ஆற்றலானது வீட்டில் நல்ல அதிர்வலைகளை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பெருமாளை மனதார பிரார்த்தித்து இந்த வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -