
நம் வீட்டில் பணம் தங்குவதற்கு மகாலட்சுமியின் அருள் தேவை. எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் நற்குணங்கள் இல்லாவிட்டால், ஒருவரிடத்தில் பணம் தங்குவது கிடையாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகிறது. நம் வீட்டில் பணம் தங்காமல் போவதற்கு, நாம் செய்யும் சாஸ்திர பிழைகள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
பணம் தங்காமல் போவதற்கு முதல் காரணம் தோஷங்கள். நமக்கு தோஷங்கள் இருந்தால், அங்கு சந்தோஷமும் இருக்காது. மகிழ்ச்சி அதிகம் இருக்கும் இடங்களில் தான் பணமும் அதிகமாக இருக்கும். பணம் அதிகம் இருக்கும் இடங்களில், மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கும். வீட்டில் தினசரி பூஜைகள் செய்யாவிட்டாலும், வாரம் ஒரு முறையாவது விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட செல்வங்கள் தங்கும். பூஜை செய்யும் பொழுது நைவேத்திய பொருட்கள் தயார் செய்த பின், அதனை ருசி பார்க்கக் கூடாது.
இறைவனுக்கு படைக்கும் உணவினை ருசி பார்த்த பின் படைத்தால், பணம் வீட்டில் தங்காது. மகாலட்சுமியின் ஸ்வரூபமாக இருக்கக்கூடிய உப்பு, வீட்டில் எப்பொழுதும் குறையாது இருக்க செல்வம் பெருகும். அத்தகைய உப்பு வைக்கக்கூடிய கலன் பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியாக இருக்க வேண்டும். உப்பை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைப்பது போன்ற விஷயங்களை செய்தாலும் வீட்டில் பணம் தங்காது.
இரவு நேரங்களில் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து, சமையலறையை சுத்த பத்தமாக வைத்துவிட்டு தான் படுக்க செல்ல வேண்டும் அப்படி அல்லாமல் எச்சில் பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு செல்வது, சமைத்த உணவினை அப்படியே விட்டுவிட்டு கெட்டுப் போக விடுவது போன்ற விஷயங்களை செய்தாலும் மகாலட்சுமியின் கோபத்திற்கும், தோஷத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும். இதனாலும் வீட்டில் பணம் தாங்காது.
பால், தயிர் போன்ற புனிதம் வாய்ந்த பொருட்களை இரவு நேரங்களில் திறந்து வைத்துவிட்டு படுக்க கூடாது. இவைகளை பகலில் தானம் செய்ய மறுக்கக்கூடாது. இரவில் தானம் செய்யக்கூடாது. இது போன்ற விஷயங்களை கடைப்பிடிக்காவிட்டாலும், பணம் வீட்டில் தங்குவதில்லை. பிறருக்கு உதவும் குணம் உள்ளவர்களிடத்தில் பணம் சேரும். எல்லாம் இருந்தும் உதவி செய்ய மனம் இல்லாதவர்களுக்கு, எவ்வளவு உழைத்தாலும் பணம் சேர்வதில்லை. அதையும் மீறி அவர்களின் புண்ணிய பலனுக்கு ஏற்ப பணம் இருந்தாலும், நோய் நொடிகளும் கூடவே அதிகமாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:
ராகு கேது பெயர்ச்சி 2025 பரிகாரம்
வீட்டை குப்பை குடோன் போல நிறைய பொருட்களை அடுக்கி வைத்திருப்பது, தூசுகளோடு சுத்தம் செய்யாமல் வைத்திருப்பது போன்ற செயல்களை செய்தாலும், அவர்கள் எவ்வளவு உழைத்தாலும் பணம் தங்குவதில்லை. சுத்தம் சோறு போடும் என்பார்கள். சுத்தம் பணமும் வரவைக்கும். வீட்டுக்குள் நுழைந்தாலே ஒரு விதமான நல்ல நறுமணம் வீச வைத்திருக்க வேண்டும். துர்நாற்றம் வீசும் படியாக வீட்டை வைத்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், உழைத்த பணம் அவர்களிடம் தங்காமல் விரயமாகி கொண்டே இருக்கும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். நறுமணத்தோடு மகாலட்சுமியின் அருள் கிடைக்க, விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். நல்ல குணத்தோடு, சுய சிந்தனையோடு, யாருடைய மனமும் நோகாதபடி பேசுங்கள். இல்லை என்று சொல்லாமல், முடிந்ததை தானம் செய்யுங்கள், பணத்தை செலவு செய்ய செய்ய, இந்த பிரபஞ்சம் உங்களிடம் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும்.