2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சியானது வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 26.4.2025 ஆம் தேதி நடைபெற்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 18.5.2025 ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் இருக்க வேண்டும் என்றால், நம்முடைய ராசிப்படி என்னென்ன பரிகாரம் செய்வது நல்லது. ஜோதிடம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 12 ராசிக்கும் செய்ய வேண்டிய பரிகார பலன்கள் இதோ உங்களுக்காக.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனி ஹோரையில் முருகப்பெருமானையும், சிவபெருமானையும் வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும். தினமும் வரக்கூடிய சனி ஹோரை காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஹோரை அட்டவணையை பார்த்தாலே இது உங்களுக்கு தெரிந்து விடும். சிவபெருமானை முருகப்பெருமானையும் வழிபட உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் பெரிய பாதிப்புகள் வராது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யவும். இதுபோக சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் கொடுத்து வழிபாடு செய்ய உங்களுடைய சங்கடங்கள் எல்லாம் தீரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமை தோறும் பெருமாளையும் அனுமனையும் வழிபாடு செய்து வர, உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. உங்களுக்கு உடன்பிறந்த பெண்கள் இருந்தால் அவர்களுடைய கஷ்டத்திற்கும் உதவி செய்யவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் நாகர் சிலைக்கு உங்கள் கையால் பால் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, ஊதுவத்தி ஏற்றி வைத்து, இனிப்பு நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமையில் செய்வது சிறப்பு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும். இதோடு உங்களால் முடிந்த அன்னதானத்தை வெள்ளிக்கிழமை தோறும் ஒருவருக்கேனும் செய்து வர, ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எந்த வித பாதிப்பையும் கொடுக்காது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் விநாயகரை வணங்க வேண்டும். தினமும் ஒருமுறையாவது விநாயகர் அகவல் கேட்க வேண்டும். விநாயகரை வழிபட உங்களுடைய துன்பங்கள் விலகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மாதந்தோறும் வரக்கூடிய பௌர்ணமி அமாவாசை தினங்களில், உங்கள் ஊர் அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். நாட்டு சர்க்கரையும் பச்சரிசி மாவும் கலந்து ஒரு மரத்தடியில் தூவி விடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கும் மயிலுக்கும் சிவப்பு நிற பூக்களை வாங்கிக் கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். முருகனுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். நல்லதே நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவன் கோவிலில் இருக்கும் கால பைரவரை தொடர்ந்து வழிபாடு செய்து வர, உங்களுடைய துன்பங்கள் எல்லாம் படிப்படியாக குறையும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் மகிஷாசுர வர்த்தினி என்று சொல்லப்படும் துர்க்கை அம்மன் அவதாரத்தினை, நீங்கள் வழிபட, ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை தராது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் அனுமனை வழிபாடு செய்ய வேண்டும். தினமும் ஒருமுறையாவது ஹனுமான் சாலிசாவை உங்கள் செவிகளில் கேளுங்கள். வீட்டில் ஹனுமன் சாலிசா ஒலிக்க விடுங்கள். நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மீனாட்சி அம்மனை வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமை சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். தினமும் பசு மாட்டிற்கு உங்கள் கையால் இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுப்பது நல்லது.