
பண வசியம் உண்டாக தாந்திரீக பரிகாரங்கள் உண்டு. இப்பரிகாரங்கள் பாரம்பரியமான முறைப்படி வடக்கு பகுதிகளில், பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகிறது. தனதானியம் பெருக இந்த பரிகாரத்தை முன்னோர்கள் செய்து வருவார்கள். ரொம்பவும் எளிமையாக செய்யக்கூடிய இந்த தாந்திரீக பண வசிய பரிகாரம் யாருக்கும் தெரியாமல் செய்யுங்கள். வீட்டில் பண வசியம் உண்டாக செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவில் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
உங்களிடம் புது ரூபாய் நோட்டு ஒன்று இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். 10 ரூபாயாக இருந்தாலும் சரி, 2000 ரூபாய் நோட்டாக இருந்தாலும் சரி. புத்தம் புதிதாக பலருடைய கைகளில் படாத சுத்தமான நோட்டாக இருக்க வேண்டும். இந்த புது ரூபாய் நோட்டை எடுத்து பூஜை அறையில் வையுங்கள். இந்த பரிகாரத்தை எந்த கிழமையிலும் நீங்கள் செய்யலாம். செய்யும் பொழுது அன்றைய நாள் மட்டும், சுத்த பத்தமாக மாமிசம் எதுவும் சாப்பிடாமல் செய்யுங்கள்.
பூஜை அறையில் ஒரு பித்தளை தாம்பாளத்தின் மீது, சிகப்பு நிற பட்டு துணி ஒன்றை விரித்து அதன் மீது ரூபாய் நோட்டை வையுங்கள். பூஜையில் உங்களுடைய இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெற வேண்டும். ஒரு வெள்ளி கிண்ணத்தில் சுத்தமான சந்தனம் இழைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அத்தர் அல்லது பன்னீர் சேர்த்து குழைக்க வேண்டும். இந்த சந்தனத்தை ரூபாய் நோட்டின் மீது நான்கு முனைகளிலும் தடவி அதன் மீது பச்சரிசியை சிறிதளவு மஞ்சளில் போட்டு எடுத்து அட்சதையாக தூவி விடுங்கள்.
கீழ் வரும் இந்த மந்திரத்தை தியான நிலையில் அமர்ந்து உங்களுடைய இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தை மனதில் நிறுத்திக் கொண்டு பணம் மென்மேலும் பெருக வேண்டும், வீட்டில் வறுமை எதுவும் ஏற்படக் கூடாது, இருக்கின்ற பிரச்சினைகள் யாவும் தீர வேண்டும், தனதானியத்திற்கு பஞ்சம் வரக்கூடாது, ஆரோக்கியமுடன், தீர்க்காயுளுடன் அனைவரும் இருக்க வேண்டும் என்று உங்கள் மனம் சொல்லுவதை பிரார்த்தனையாக செய்து கொள்ளுங்கள்.
பண வசிய மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ
இந்த மந்திரத்தை ஒன்பது முறை உச்சரிக்க வேண்டும். நவகிரக தோஷங்களை நீக்கி வீட்டில் குடும்பத்தில் தொழில் ரீதியான பிரச்சனைகள் இருந்தால் அவற்றை இம்மந்தரம் நிவர்த்தி செய்யும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும், வேலையில் உங்களுக்கு பிரமோஷன் கிடைக்க வேண்டியது இருந்தால் அவை கிடைக்கும், புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். திறமை இருந்தும் கிடைக்காத அங்கீகாரம் அல்லது அதிர்ஷ்டம் எதுவாக இருந்தாலும், அவை உங்களுக்கு இனி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:
அடமானத்தில் இருக்கும் நகையை திருப்ப பைரவர் வழிபாடு
பூஜை முடிந்ததும் அந்த ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு போய் மடிக்காமல் அப்படியே நீங்கள் எங்கு பணத்தை சேமித்து வைக்கிறீர்களோ, அந்த இடத்தில் வையுங்கள். பீரோவில் பணத்தை வைத்திருந்தால், பணத்துடன் சேர்த்து இதையும் வையுங்கள். தொடர்ந்து பணத்திற்கு வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி தூபம் காண்பித்து வாருங்கள். இதனால் பணம் பன்மடங்கு பெருகும். தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காண்பீர்கள். இந்த பரிகாரத்தை செய்வதை வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள். சொல்லிவிட்டால் அதன் பலன் இருக்காது என்பார்கள்.