- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பணம் அதிகம் கிடைக்க செய்யும் பூஜை முறை

மனிதன் நாகரீகமடைய காலத்திலிருந்து அவன் உருவாக்கிய பல பொருட்கள் ஒவ்வொரு காலத்திலும் அவனது வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உதவியிருக்கிறது. ஏராளமான கண்டுபிடிப்புகளை அவன் உருவாக்கியிருந்தாலும் “பணம்” என்கிற மனிதனின் ஒரு படைப்பு, அவனையே விஞ்சி இன்று உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பணம் நம் எல்லோருக்குமே அவசிய தேவையாக இருக்கிறது. அந்த பணம் நமக்கு அதிகளவில் கிடைக்க சித்தர்கள் கூறிய மாந்திரீக தந்திர முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தங்களின் கடுமையான தவயோகத்தால் பெற்ற ஞானகுருவின் அருளினாலும், அதிசித்தனாகிய சிவபெருமானின் விருப்பத்தாலும் பல ரகசிய மந்திர – தந்திர கலைகள் உலக மக்கள் பயன்படுத்தி பலன் பெற வேண்டி சித்தர் பெருமக்களால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் மனதளவில் சரியாக பக்குவப்பட்ட நபர்களுக்கே இக்கலைகளின் அனைத்து ரகசியங்களும் சித்தர் பெருமக்களால் கற்று தரப்பட்டது .

- Advertisement -

ஞான வாழ்வை விரும்பும் ஞானிகள் மற்றும் துறவிகளுக்கு பணத்தின் மீதான எந்த ஒரு பற்றுதலும் கிடையாது. ஆனால் அந்த ஞானிகளுக்கும் உதவி புரிகின்ற இல்லறவாசிகளுக்கு பணம் எல்லாவிதத்திலும் தேவைபடுகிறது. இல்லறத்தில் வாழ்ந்தாலும் இறைவனின் மீது பக்தி கொண்டு அனைத்து உயிர்களுக்கும் சேவை புரிகின்ற சிறந்த மனிதர்கள் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள கூறப்பட்ட “மாந்திரீக – தந்திர” கலைகளில் இதுவும் ஒன்று.

ஒரு “ரேவதி” நட்சத்திர தினத்தன்று நாவல் மரத்தில் வளர்ந்திருக்கும் புல்லுருவி செடிக்கு, மஞ்சள் நிற கயிற்றில் காப்பு கட்டி, தீப தூபங்கள் காட்டி பூஜித்து, அந்த புல்லுருவியை அதே கயிற்றில் கட்டி உங்கள் வலது கையில் காப்பு கயிறாக கட்டிக்கொள்ள பணவரவு அதிகரித்தல், எதிர்பாராத வகையில் திடீர் பொருள் வரவு போன்றவை ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அனைவரையும் வசீகரிக்கும் ஜன வசிய மை தயாரிக்கும் முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panam vasiyam seimurai in Tamil or panam vasiyam seivathu eppadi in Tamil. It is also called as panam vasiyam manthiram in Tamil

- Advertisement -