அனைவரையும் வசியம் செய்யும் சர்வ ஜன வசிய மை தயாரிக்கும் முறை

- Advertisement -

மனிதன் என்பவன் சமூக விலங்கு என்ற அறிவியல் அறிஞர்களின் கருத்தில் உண்மை இருக்கவே செய்கிறது. மனிதனாக பிறந்த ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் இன்னொரு மனிதர்களின் உதவியின்றி இந்த உலகத்தில் வாழ்வதென்பது சாத்தியமேயில்லை. ஆனால் நம்முடைய உறவினர்கள், நமக்கு தெரிந்தவர்கள் போன்றவர்களை தாண்டி மற்ற அனைவருமே நமக்கு உதவுவார்கள் என கூறி விட முடியாது. இப்படி நமக்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களையும் நமக்கு வேண்டிய செயல்களை செய்ய வைக்கும் சித்தர்கள் கண்டுபிடித்த மாந்த்ரீக முறைக்கு ஜன வசியம் என்று பெயர் இந்த ஜன வசியம் எப்படி செய்வதது என்பதை இங்கு காண்போம்.

மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு அறிய, தெய்வத்தன்மை மிகுந்த கலைகளை கண்டுபிடித்தனர் சித்தர் பெருமக்கள். அதில் ஒன்று தான் மந்திர, தந்திரங்களை பயன்படுத்தி செய்யபடும் வசிய கலை ஆகும். வசிய கலையில் தேவ வசியம், மூலிகை வசியம், மிருக வசியம், ஆண் – பெண் வசியம் என பலவகைகள் உண்டு. அதில் ஒன்று தான் ஜன வசியம் ஆகும்.

- Advertisement -

முன் பின் அறிந்திராதவர்களால் நமக்கு நற்பலன்களை பெறுவதற்கும், அரசாங்க தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவிகளை பெறுவதற்கும், கலைத்துறைகளில் இருப்பவர்கள் தங்கள் பால் மக்களை வசியம் செய்வதற்கும் அக்காலம் முதலே இந்த ஜன வசிய முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசிய முறையால் நமக்கும் பிறருக்கும் நன்மை ஏற்படும் வகையில் செயல்பட்டால் மட்டுமே நமக்கு சித்தர்களின் அருளாசி கிட்டும். தீய எண்ணங்களோடு இவற்றை செய்தால் அதே சித்தர்களின் சாபங்களை பெறுவோம். இப்போது ஜன வசியம் செய்யும் வசிய மை தயாரிக்கும் முறை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சிறிது பச்சை கற்பூரம், சிறிது சுத்தமான சந்தன அத்தர், சிறிதளவு சுத்தமான புனுகு, சிறிதளவு சுத்தமான கஸ்தூரி, வட திசையை நோக்கி செல்லும் தாழம் பூ செடியின் வேருக்கு காப்பு கட்டி, பூஜை செய்து பின்பு பறித்து மேலே கூறப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து மை போல் ஆக்கி ஒரு சுத்தமான டப்பாவில் வைத்துக்கொண்டு. உங்களுக்கு பிற மனிதர்கள், அரசாங்கத்தில் இருப்பவர்களை சந்தித்து அவர்களால் காரியம் ஏற்பட வேண்டியிருக்கும் சமயங்களில் இந்த மையை உங்கள் நெற்றிப்பொட்டில் சிறிதளவு பூசிக்கொண்டு செல்ல ஜன வசியம், ராஜ வசியம் ஏற்பட்டு உங்களுக்கு அனுகூலமான காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
நவராத்திரி விரதம் இருக்கும் முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sarva vasiya mai seivathu eppadi in Tamil. Vasiyam seivathu eppadi in Tamil. Sarva vasiyam seimurai.

- Advertisement -