
பண தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அனைவரும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் அவர்களுடைய பண தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத ஒரு சூழ்நிலை உண்டாகும். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும் என்பதற்காகவும் பண தேவைகள் என்பது உண்டாகும். ஒரு சிலருக்கு திடீரென்று மருத்துவ செலவு, சுப செலவுகள் போன்றவற்றை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அந்த நேரத்திலும் பணத் தேவை என்பது உண்டாகும். ஆக மொத்தம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தேவை என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கு இன்று இரவு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இன்று பங்குனி மாதத்தின் அமாவாசை. சனிக்கிழமையோடு வந்து இருக்கிறது. மேலும் இன்றைய தினம் தான் சனிப்பெயர்ச்சியும் நடைபெற்றது. இதோடு மட்டுமல்லாமல் சூரிய கிரகணமும் நடைபெற்று விட்டது. இவை அனைத்தும் ஒருசேர வரக்கூடிய இன்றைய நாளில் இரவு நேரத்தில் நாம் செய்யக்கூடிய இந்த ஒரு ரூபாய் பரிகாரம் நம்முடைய பணத்தேவையை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும். இதற்கு ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு அதை ஈரம் இல்லாமல் சுத்தமான துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். படுக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த ஒரு ரூபாய் நாணயத்தின் இரண்டு புறங்களிலும் முடிவிலி(infinite) வடிவத்தை சிவப்பு அல்லது பச்சை நிற ஸ்கெட்ச்சை பயன்படுத்தி வரைய வேண்டும்.
பிறகு இதை உங்களுடைய வலது கையில் வைத்துக்கொண்டு இடது கையால் மூடி செல்வம் பெருகட்டும் பணம் பெருகட்டும் என்று குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் அரை மணி நேரம் வரை முழு மனதோடு நிறுத்தி நிதானமாக கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது அவ்வளவு பணம் கிடைக்க வேண்டும் என்று மனதார நினைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக தேவைப்படுகிறது, கடனாக வேண்டும் என்று கேட்காமல் எவ்வளவு தொகை வேண்டுமோ அதை மட்டும் சொல்லி பணம் வேண்டும் என்று கேட்க வேண்டும்.
பிறகு இதை அப்படியே உங்களுடைய தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்பொழுது ஆலயத்திற்கு செல்கிறீர்களோ அப்பொழுது இந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் சேர்த்து விட வேண்டும் அல்லது ஆலயத்தில் யாசகம் கேட்பவர்களுக்கு இந்த நாணயத்தை தந்துவிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:வராத பணம் வர பரிகாரம்
பல அற்புதமான சிறப்பு மிகுந்த இந்த நாளில் ஒரு ரூபாயை வைத்து நாம் பரிகாரம் செய்ய நம்முடைய பண தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.